உலக செய்திகள்

ஹைட்ராக்ஸி குளோரோகுயினை கொரோனா சிகிச்சைக்கு மிரட்டி வாங்கும் டிரம்புக்கு எதிராக விமர்சனம் + "||" + Hydroxychloroquine: The unproven 'corona drug' Trump is threatening India for

ஹைட்ராக்ஸி குளோரோகுயினை கொரோனா சிகிச்சைக்கு மிரட்டி வாங்கும் டிரம்புக்கு எதிராக விமர்சனம்

ஹைட்ராக்ஸி குளோரோகுயினை கொரோனா சிகிச்சைக்கு மிரட்டி வாங்கும் டிரம்புக்கு எதிராக விமர்சனம்
மலேரியா மருந்து ஹைட்ராக்ஸி குளோரோகுயினை கொரோனா சிகிச்சைக்கு மிரட்டி வாங்கும் நோக்கம் என்ன? டொனால்டு டிரம்புக்கு எதிராக அமெரிக்காவில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
வாஷிங்டன்

கொரோனா  வைரஸ் நோய்க்கு தற்போது அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சைகள் அல்லது தடுப்பு தடுப்பூசிகள் எதுவும் இல்லை மலேரியா மருந்து ஹைட்ராக்ஸி குளோரோகுயின், நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சாத்தியமான சிகிச்சையாக பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் மருந்துகளில் ஒன்றாக உள்ளது.

உலகின் மிகப்பெரிய மருந்து உற்பத்தியாளர்களில் இந்தியாவும் ஒன்றாகும். கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சேவை செய்யும் சுகாதாரப் பணியாளர்களுக்கு சிகிச்சையளிக்க ஹைட்ராக்ஸி குளோரோகுயின் பயன்படுத்த இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கடந்த மாதம் பரிந்துரைத்திருந்தது.

இந்தியா அமெரிக்காவுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயினை ஏற்றுமதி  செய்யவில்லை எனில் பதிலடி கொடுப்போம் என மிரட்டினார்.

ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் என்பது மலேரியா காய்ச்சலுக்காக பயன்படுத்தப்படும் ஒரு மருந்தாகும். இந்த மருந்து இரண்டாம் உலக போரின் போது கண்டுபிடிக்கப்பட்டது. இது ருமடாய்டு ஆர்த்ரைட்டீஸ் நோய்க்கும் கொடுக்கப்படுகிறது. இந்த ஆன்டி மலேரியா மருந்தை உட்கொண்டால் தசை மற்றும் மூட்டுகளில் வலி, தோலில் அரிப்புகள், இதயம் மற்றும் நுரையீரல் அழற்சி, காய்ச்சல், சோர்வு ஆகிய அறிகுறிகளை காட்டும் என ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

ஹைட்ராக்ஸி குளோரோகுயின், பிளாக்குயூனில் என்ற பிராண்டின் பெயரில் பொதுவான மருந்தாக விற்பனை செய்யப்படுகிறது. இந்த மருந்தை கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் நோய் அறிகுறிகளற்ற சுகாதாரப் பணியாளர்களுக்கு நோய் வராமல் தடுக்க அவர்களுக்கு கொடுக்க வேண்டும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் பரிந்துரை செய்துள்ளது. தேசிய டாஸ்க் போர்ஸால் பரிந்துரை செய்யப்பட்ட இந்த மருந்தை அவசர நிலைகளில் மட்டுமே பயன்படுத்த இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி அளித்துள்ளது. 

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களைப் பார்த்துக் கொள்ளும் பணியில் உள்ள, நோய் அறிகுறிகளற்ற சுகாதாரப் பணியாளர்களுக்கு, இந்த நோய்த் தொற்றுப் பரவாமல் இருக்க ஹைட்ராக்ஸி குளோரோகுயின் கொடுக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த மருந்தை பயன்படுத்தினால் இதயத்தில் அடைப்பு, மயக்கம், குமட்டல், தலைச்சுற்றல், வாந்தி, வயிற்றுபோக்கு உள்ளிட்ட பக்கவிளைவுகளை ஏற்படுத்தும்.

கடந்த மார்ச் மாதம் அரிசோனாவில் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தின் காம்பினேஷன் கொண்ட குளோரோகுயின் பாஸ்பேட் மருந்தை கணவன், மனைவி இருவரும் உட்கொண்டனர். மீன் தொட்டிகளை சுத்தம் செய்ய பயன்படுத்தப்படும் இந்த மருந்தை உட்கொண்டதால் கணவன் பலியாகிவிட்டார். மனைவி ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றார்.

பிரான்ஸ் நாட்டில் 40 கொரோனா நோயாளிகளுக்கு ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்து கொடுக்கப்பட்டது. இதில் பாதிக்கும் மேற்பட்டோருக்கு 3 முதல் 6 நாட்களில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. மலேரியா தடுப்பு மருந்து சார்ஸ், கோவ்-2 தொற்று உடலில் உள்ள செல்களில் வேகமாக நுழைவதை தடுக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன. ஆனால் சீனாவில் ஒரு நோயாளிக்கு ஹைட்ராக்ஸிகுளோராகுயின் கொடுக்கப்பட்டு நிலைமை மோசமானது. மேலும் 4 நோயாளிகளுக்கு கல்லீரல் கோளாறு, வயிற்றுபோக்கு ஏற்பட்டது. ஒரு நோயை தடுக்க பயன்படுத்தப்படும் ஒரு மருந்து சிறந்த முறையில் சோதிக்கப்படாமல் பயன்படுத்தினால் அது பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். 

நாட்டு மருத்துவர் விளாதிமீர் செலென்கோ என்பவரின் பரிந்துரையின் பேரில் டிரம்ப் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மற்றும் அசித்ரோமைசினை முன்னதாக பரிந்துரை செய்ததாக தற்போது தெரியவந்துள்ளது.

டாக்டர் ஃபாஸி எச்சரிக்கையை உதாசீனப்படுத்திய ஜனாதிபதி டிரம்ப், “டாக்டர் ஃபாஸி கூறும் ஆய்வுகளுக்காகவெல்லாம் காத்திருக்க முடியாது, நமக்கு 2 மணி நேரம் கூட இல்லை” என்றார். இந்நிலையில் பிரெஞ்ச் ஹைட்ராக்ஸி குளோரோகுய்ன் மருந்து உற்பத்தி நிறுவனமான சனோஃபியில் பெரிய பங்குதாரர் பிஷர் சொத்து மேலாண்மை நிறுவனமாகும் இந்த பரஸ்பர நிதிய நிறுவனத்தை நடத்துபவர் கென் பிஷர் இவர் டொனால்ட்டு ட்ரம்ப் மற்றும் குடியரசுக் கட்சிக்கு பெரிய நன்கொடையாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதோடு மட்டுமல்லாமல் டிரம்ப் பேச்சைக் கேட்டு நிறைய மருந்து உற்பத்தியாளர்கள் ‘ஜானரிக்’ பெயரில் ஹைட்ராக்ஸி குளோரோகுய்னை உற்பத்தி செய்கின்றனர், இதில் ஒரு நிறுவனம் அம்நீல் பார்மசூட்டிக்கல் நிறுவனமாகும் இதன் இணை நிறுவனர் ஜனாதிபதி டிரம்புடன் கோல்ஃப் ஆடுபவர். ஜனாதிபதி ஆன பிறகும் இவருடன் இருமுறை டடிரம்ப் கோல்ஃப் ஆடியுள்ளார்.இவ்வாறு அமெரிக்காவில் டிரம்பின் நோக்கத்தை விமர்சித்து செய்திகள் வெளியாகி வருகின்றன.

மேலும் இதனை சிலர் மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் எடுத்துக் கொண்டு இறந்துள்ளது, சிலர் மருத்துவமனைகளில் சிகிச்சையில் இருந்து வருவதும் தெரிந்த பிறகு தினமும் 5 முறையாவது அதிபர் ட்ரம்ப் இந்த மருந்தின் பெயரை உச்சரிக்காமல் இருப்பதில்லை என்று நியூயார்க் டைம்ஸ் கடும் விமர்சனம் செய்து செய்தி வெளியிட்டுள்ளது.

ரியல் எஸ்டேட் விற்பனையாளர் போல் அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்படாத ஹைட்ராக்சஸி குளோரோகுய்ன் குறித்து டிரம்ப் கூவிக் கூவி விற்பது ஏன் என்ற சந்தேகங்கள் அங்கு வேறு விதங்களில் எழுந்து வருகின்றன. பயன்படுத்தினால் என்ன? நாம் என்னத்தை இழக்கப் போகிறோம்? என்று அவர் 5 முறை கேட்டதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி அறிக்கை சந்தேகம் எழுப்பியுள்ளது.

ஹைட்ராக்சஸி குளோரோகுய்ன் ஒரு முறையான சிகிச்சையாக ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டால் அதனால் ஏகப்பட்ட அமெரிக்க மருந்து நிறுவனங்களுக்கு ஏகப்பட்ட லாபம் கிடைக்கும் இந்த லாபத்தில் ஜனாதிபதி டிரம்புடன் நட்பு வட்டத்தில் உள்ள மூத்த செயலதிகாரிகல் பங்குதாரர்களுக்கும் நல்ல லாபம் கிடைக்கும் என்று நியூயார்க் டைம்ஸ் செய்தி அறிக்கை தெரிவிக்கிறது.

பிரான்ஸில் பிளாகுயினில் என்ற பிராண்ட் பெயரில் தயாரிக்கப்படும் ஹைட்ராக்சஸி குளோரோ குயின் தயாரிப்பு நிறுவனமான சனோஃபி என்ற நிறுவனத்தில் அதிபர் டிரம்புக்குச் சிறிய பங்கிருப்பதாகவும் நியூயார்க் டைம்ஸ் பகீர்க்குற்றச்சாட்டுகளை வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனாவை விட சக்தி வாய்ந்த பல வைரஸ்கள் நம்மை தாக்க கூடும் - வவ்வால் பெண்மணி எச்சரிக்கை
கொரோனாவை விட சக்தி வாய்ந்த பல வைரஸ்கள் நம்மை தாக்க கூடும் என வவ்வால் பெண்மணி எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
2. 25 நாட்களில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு- இறப்பு எண்ணிக்கை மூன்று மடங்காக உயர்வு
கடந்த 25 நாட்களில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு- இறப்பு எண்ணிக்கை கிட்டத்தட்ட மூன்று மடங்காக அதிகரித்துள்ளது.
3. அதிகரிக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு: இந்தியாவில் இருந்து தனது குடிமக்களை அனுப்ப சீனா முடிவு
கொரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகரித்து வருவதால் சீனா தனது குடிமக்களை இந்தியாவில் இருந்து அனுப்ப முடிவு செய்து உள்ளது.
4. தந்தையை 1200 கிலோமீட்டர் சைக்கிளில் அழைத்து வந்த மகளை பாராட்டிய இவான்கா டிரம்ப்
காயமுற்ற தந்தையை 1200 கிலோமீட்டர் சைக்கிளில் அழைத்து வந்த மகளை அழகிய சாதனை என இவான்கா டிரம்ப் பாராட்டி உள்ளார்
5. உத்திரபிரதேசத்துக்கு பதிலாக ஒடிசாவுக்குச் சென்ற புலம் பெயர்ந்த தொழிலாளர்கள சிறப்பு ரெயில்
உத்திரபிரதேசத்துக்கு பதிலாக ஒடிசாவுக்குச் சென்ற புலம் பெயர்ந்த தொழிலாளர்கள சிறப்பு ரெயில். பரிதவிக்கும் தொழிலாளர்கள்.