கொரோனா பரவலுக்கு 5 ஜி காரணமா நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்? யூடியூப்பில் வதந்தி வீடியோக்கள் அகற்றம்


கொரோனா பரவலுக்கு 5 ஜி காரணமா நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்? யூடியூப்பில் வதந்தி வீடியோக்கள் அகற்றம்
x
தினத்தந்தி 8 April 2020 3:28 AM GMT (Updated: 8 April 2020 3:47 AM GMT)

கொரோனா பரவலுக்கு 5 ஜி நெட்வொர்க் காரணம் என வதந்தி காரணமாக யூடியூப்பில் வீடியோக்கள் அகற்றப்பட்டு வருகிறது.

லண்டன்

கொரோனா வைரஸ் 5ஜி நெட்வொர்க் காரணமாகவே பரவியது என போலிச் செய்திகளை பரப்பும் அனைத்து வீடியோக்களையும் தடை செய்துள்ளது யூடியூப் நிறுவனம்.அதுமட்டுமல்ல, கொரோனாவுக்கு காரணம் இலுமினாட்டிகள் என்பது போல செய்திகளை பரப்பும் அனைத்து 'கான்ஸ்பிரஸி தியரி' (சதித்திட்ட கோட்பாடு) வீடியோக்களையும் யூடியூப் தடை செய்துள்ளது. கொரோனாவுக்கு காரணம் 5ஜி தொழில்நுட்பம்தான் என பிரபல சதித்திட்ட கோட்பாட்டாளர் மற்றும் முன்னாள் கால்பந்தாட்ட வீரர் டேவிட் ஈக் பேசியது சர்ச்சையானது.

இதன் காரணமாக இங்கிலாந்தில் சில தொலைத்தொடர்பு நிறுவனங்களின் ஊழியர்கள் தாக்கப்பட்டனர். செல்போன் கோபுரங்களுக்கும் தீயிடப்பட்டது.

5 ஜி, நெட்வொர்க் மற்றும் உலகெங்கும் பரவும் கொடிய தொற்றுநோய்க்கும் எந்த தொடர்பும் இல்லை என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

மொபைல் போன்கள் மற்றும் செல் டவர்கள் எக்ஸ்-கதிர்கள் மற்றும் புற ஊதா ஒளியைக் காட்டிலும் குறைவான அதிர்வெண்களில் ரேடியோ சிக்னல்களை அனுப்புகின்றன, அவை மனித செல்கள் மற்றும் டி.என்.ஏவை சேதப்படுத்தும் அளவுக்கு வலிமையானவை அல்ல மற்றும் அயனியாக்கும் கதிர்வீச்சு என அவை வகைப்படுத்தப்படுகின்றன.

ஏ.எம் ரேடியோ முதல் செல்போன்கள் வரை நுண்ணலை அடுப்புகள் வரை அனைத்தையும் உள்ளடக்கியவை  அயனியாக்கம் செய்யும் கதிர்வீச்சு என வகைப்படுத்தப்படுகின்றன இவை டி.என்.ஏவை நேரடியாக பாதிக்காது. நெருங்கிய வரம்பில் செல்களை வெப்பமாக்குவதைத் தவிர அவை நீண்டகாலமாக பாதிப்பில்லாதவை என்று கருதப்படுகின்றன என நிபுணர்கள் தெரிவித்ததுள்ளனர்.

இதனை அடுத்து சமூக ஊடகங்கள் இவ்வாறு போலிச் செய்திகளை பரப்பும் பதிவுகளையும், காணொளிகளையும் நீக்கி வருகின்றன. யூடியூப் இந்த வீடியோவை நீக்கியது மட்டுமல்லாமல் தங்கள் கொள்கைகளை மீறிய அனைத்து வீடியோக்களையும் நீக்குகிறது.

Next Story