பாகிஸ்தான் நாடாளுமன்ற சபாநாயகருக்கு கொரோனா உறுதி


பாகிஸ்தான் நாடாளுமன்ற சபாநாயகருக்கு கொரோனா உறுதி
x
தினத்தந்தி 2 May 2020 1:29 AM GMT (Updated: 2 May 2020 1:29 AM GMT)

பாகிஸ்தான் நாடாளுமன்ற சபாநாயகருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இஸ்லாமாபாத்,

உலக நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பாகிஸ்தானிலும் வேகமாக பரவி வருகிறது. அங்கு 16 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனாவால் 350-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளனர்.

இந்தநிலையில் அந்த நாட்டின் நாடாளுமன்ற சட்ட கீழவையின் சபாநாயகர் ஆசாத் குவைசருக்கும் (வயது 50) கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் “நான் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளேன். அதனால் என் வீட்டில் என்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளேன்” என்று ஆசாத் குவைசர் குறிப்பிட்டு உள்ளார். அவருடைய மகன், மகள், சகோதரி மற்றும் மைத்துனருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களும் தங்களை தனிமைப்படுத்தி கொண்டுள்ளனர்.

சமூக விலகலை மீறி ஆசாத் குவைசர் கடந்த 27-ந் தேதி இரவு தனது வீட்டில் இப்தார் விருந்து அளித்ததாக கூறப்படுகிறது.

முன்னதாக அங்குள்ள சிந்து மாகாண கவர்னர் இம்ரான் இஸ்மாயில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Next Story