உலக செய்திகள்

பியர்ல் ஹார்பர்-இரட்டை கோபுர தாக்குதல்களை விட கொரோனா மோசமான அழிவை ஏற்படுத்தி உள்ளது- டொனால்டு டிரம்ப் + "||" + Trump says coronavirus worse 'attack' than Pearl Harbor

பியர்ல் ஹார்பர்-இரட்டை கோபுர தாக்குதல்களை விட கொரோனா மோசமான அழிவை ஏற்படுத்தி உள்ளது- டொனால்டு டிரம்ப்

பியர்ல் ஹார்பர்-இரட்டை கோபுர தாக்குதல்களை விட கொரோனா மோசமான அழிவை ஏற்படுத்தி உள்ளது- டொனால்டு டிரம்ப்
பியர்ல் ஹார்பர் இரட்டை கோபுர தாக்குதல் சம்பவங்களை விட அமெரிக்காவில் கொரோனா மோசமான அழிவை ஏற்படுத்தி உள்ளதாக ஜனாதிபதி வேதனை தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன்

அமெரிக்காவில் 12 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த கொரோனா தாக்குதலை கட்டுப்படுத்துவதற்காக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் அந்த நாட்டின் பொருளாதாரம் சீர் குலைந்துள்ளது. 3 கோடி அமெரிக்கர்கள் வேலையின்றி, நிவாரணம் கோரி உள்ளனர்.

அமெரிக்க உள்நாட்டு வரைவு அறிக்கை ஒன்று வெளியாகி உள்ளது.அதில், வரும் ஜூன் மாதம் 1-ஆம் தேதி முதல் கொரோனா வைரஸ் தாக்கி தினமும் 3 ஆயிரம் பேர் இறப்பார்கள் என கணித்து சொல்லப்பட்டுள்ளது.தினசரி சுமார் 2 லட்சம் பேர் இந்த வைரஸ் தாக்குதலுக்கு ஆளாவார்கள் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளதால்,இந்த தகவல்கள் மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி வருகின்றன.

இது குறித்து பிரபல ஆங்கில ஊடகமான நியூயார்க் டைம்ஸ் கூறி இருப்பதாவது:-

கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பான புள்ளி விவரங்கள், புத்திசாலித்தனமான யதார்த்தத்தை கோடிட்டுக்காட்டுவதாக அமைந்துள்ளன.அதே நேரத்தில் அமெரிக்கா பதுங்கி உள்ளது. கடந்த 7 வாரங்களாக நிலைமையில் பெரிதான மாற்றம் எதுவும் இல்லை. 

பொருளாதார நடவடிக்கைகளை மீண்டும் திறப்பது என்பது நிலைமையை மேலும் மோசமாக்கும் என குறிப்பிட்டுள்ளது.

இதற்கிடையே உள்நாட்டு வரைவு அறிக்கையை அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு சபைகளும், தேசிய தொற்றுநோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையமும் நிராகரித்துள்ளன.அதே நேரத்தில் இந்த வரைவு அறிக்கையை தயாரித்தவர், ஜான்ஸ் ஹாப்கின்ஸ் புளூம்பெர்க் சுகாதார கல்லூரியின் தொற்றுநோய் பேராசிரியர் ஜஸ்டின் லெஸ்லர் என்று கூறப்படுகிறது.

இந்த அறிக்கை குறித்து வாஷிங்டன் வெள்ளை மாளிகை செய்தித்தொடர்பாளர் ஜட் டீரெ கூறுகையில், இந்த அறிக்கை, வெள்ளை மாளிகை ஆவணமோ, கொரோனா வைரஸ் பணிக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணமோ இல்லை. இந்த தரவு பணிக்குழு அல்லது தரவுகளால் செய்யப்பட்ட எந்த மாதிரியையும் பிரதிபலிக்காது 

அமெரிக்காவில் கட்டுப்பாட்டை தளர்த்த  ஜனாதிபதியின்  வழிகாட்டுதல்கள் ஒரு விஞ்ஞான உந்துதல் அணுகுமுறையாகும், இது மத்திய அரசாங்கத்தின் உயர்மட்ட சுகாதார மற்றும் தொற்று நோய் நிபுணர்கள் ஒப்புக் கொண்டது. அமெரிக்க மக்களின் ஆரோக்கியம் ஜனாதிபதி டிரம்ப்பின் முதன்மை முன்னுரிமையாக உள்ளது, மேலும் கட்டுப்பாடுகளை எளிதாக்குவதற்கான மாநிலங்களின் முயற்சிகளை நாங்கள் கண்காணிபது  தொடரும் என கூறி உள்ளார். 

பியர்ல் ஹார்பர் இரட்டை கோபுர தாக்குதல்  சம்பவங்களை விட அமெரிக்காவில் கொரோனா மோசமான அழிவை ஏற்படுத்தி உள்ளதாக ஜனாதிபதி வேதனை  தெரிவித்துள்ளார்.

1941 ஆம் ஆண்டில் பியர்ல் ஹார்பர் துறைமுகம் மீது ஜப்பான் குண்டுவீசிய பிறகே, 2ம் உலக போரில் அமெரிக்கா குதித்தது. 2001ம் ஆண்டில் நியூயார்க்கிலுள்ள இரட்டை கோபுரங்களை அல்கொய்தா பயங்கரவாதிகள் விமானங்களை மோதி தகர்த்தபிறகே, ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்து தலிபான்களுக்கு எதிராக அமெரிக்கா போர் தொடுத்தது.

இந்த 2 சம்பவங்களை சுட்டிக்காட்டி, அதை காட்டிலும் கொரோனா நோய் அமெரிக்காவில் மோசமான அழிவை ஏற்படுத்தியுள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். இதுபோன்ற நிலையை அமெரிக்கா முன்னெப்பொதும் சந்தித்ததில்லை எனவும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஆயுதங்களுக்கு செலவழிக்கும் பணத்தை கொரோனா ஆராய்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும் -போப் பிரான்சிஸ்
ஆயுதங்களுக்கு செலவழிக்கும் பணத்தை கொரோனா போன்ற பெருந்தொற்றை தடுப்பதற்கான ஆராய்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும் என்று அரசியல் தலைவர்களை போப் பிரான்சிஸ் கேட்டுக் கொண்டார்.
2. தொழிலாளர்களை நோக்கி பிஸ்கெட் பாக்கெட்டுகளை தூக்கி வீசி எறிந்த ரெயில்வே அதிகாரி
உத்தரப்பிரதேசத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பயணித்த சிறப்பு ரெயிலில் தொழிலாளர்களை நோக்கி ரெயில்வே அதிகாரி ஒருவர் பிஸ்கெட் பாக்கெட்டுகளை தூக்கி எறிந்த வீடியோ வைரலாகி வருகிறது.
3. சென்னையை தவிர்த்து பிற பகுதிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள முக்கிய தளர்வுகள் - முழு விவரம்
சென்னை காவல் எல்லை தவிர்த்து பிற பகுதிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள முக்கிய தளர்வுகள் என்னென்ன? முழு விவரம்
4. ஜூன் மாதம் நடைபெற இருந்த ஜி 7 நாடுகளின் மாநாடு செப்டம்பர் மாதத்திற்கு ஒத்தி வைப்பு
ஜூன் மாதம் நடைபெற இருந்த ஜி 7 நாடுகளின் மாநாட்டை டொனால்டு டிரம்ப் செப்டம்பர் மாதத்திற்கு ஒத்தி வைத்துள்ளார்.
5. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,380 பேருக்கு கொரோனா பாதிப்பு
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,380 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.