ஏமனில் ஹவுதி புரட்சிபடையின் முக்கிய தளபதி கொலை


ஏமனில் ஹவுதி புரட்சிபடையின் முக்கிய தளபதி கொலை
x
தினத்தந்தி 8 May 2020 7:14 AM GMT (Updated: 8 May 2020 12:40 PM GMT)

ஏமனில் ஈரானிய ஆதரவுப்பெற்ற ஹவுதி புரட்சிபடையின் முக்கிய தளபதி முகமது அல் ஹம்ரான் நேற்று கொல்லப்பட்டார் என அதிகாரப்பூர்வமாக உறுதிசெய்யப்பட்டுள்ளது.

சானா

ஏமன் மத்திய மாகாணங்களில் அரசாங்கப் படைகளுடனான சண்டை தீவிரமடைந்துள்ள நிலையில் மரிப் அருகே  நடந்த சண்டையில் முமகது அப்துல் கரீம் அல் ஹம்ரான் கொல்லப்பட்டது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அல்-ஹம்ரான், ஹவுதி புரட்சிப்படையின் சிறப்புப் படைப் பிரிவின் தளபதி ஆவார். ஹவுதி தலைவர் அப்துல்-மாலிக் அல்-ஹவுதி உடன் நெருங்கிய உறவினரும் என்று கூறப்படுகிறது.இதுவரை இந்த ஆண்டு போரில் கொல்லப்பட்ட மிக உயர்ந்த தளபதி முகமது அல் ஹம்ரான் ஆவார்.

அல்-ஹம்ரான் ஹவுதி புரட்சிபடையின் உயரடுக்கு படைக்கு தலைமை தாங்கினார், இது லெபனான் ஹெஸ்பொல்லா போராளி குழுவிலிருந்து பயிற்சி பெற்றது என உள்ளுர் ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன.மரிப் மற்றும் அல்-பேடா மத்திய மாகாணங்களுக்கு இடையிலான மோதல்களில் அல்-ஹம்ரான் கொல்லப்பட்டார் என ஏமன் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஏமன் அரசாங்கப் படைகளை ஆதரிக்கும் சவுதி தலைமையிலான கூட்டணியுடனான போர் விமானங்கள் மாகாணங்கள் முழுவதும் ஹவுதி இலக்குகளை குண்டுவீசி தாக்கின. இருபுறமும் டஜன் கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர். பேடாவில் குறைந்தது 16 போராளிகள் கொல்லப்பட்டனர், பெரும்பாலும் ஹவுதிகள் 


Next Story