கொரோனா வைரஸ் தொற்று: வெறுப்பு -இனவெறி சுனாமியை கட்டவிழ்த்துவிட்டு உள்ளது -ஐ.நா வேதனை


கொரோனா வைரஸ் தொற்று: வெறுப்பு -இனவெறி சுனாமியை கட்டவிழ்த்துவிட்டு உள்ளது -ஐ.நா வேதனை
x
தினத்தந்தி 8 May 2020 10:46 AM GMT (Updated: 8 May 2020 10:46 AM GMT)

கொரோனா வைரஸ் தொற்று வெறுப்பு மற்றும் இனவெறி சுனாமியை கட்டவிழ்த்துவிட்டு உள்ளது என ஐ.நா பொதுச்செயலாளர் அந்தோணியா குத்ரோஸ் வேதனை தெரிவித்து உள்ளார்.

ஜெனீவா

 ஐ.நா பொதுச்செயலாளர் அந்தோணியா குத்ரோஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-

கொரோனா வைரஸ் தொற்று  வெறுப்பு மற்றும் இனவெறி சுனாமியை கட்டவிழ்த்துவிட்டு உள்ளது. இந்த விவகாரத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு முழுமையான முயற்சி செய்ய வேண்டும்.

புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகள் குறிப்பாக பாதிக்கப்பட்டுள்ளனர், அவர்கள் வைரஸின் ஆதாரமாக இழிவுபடுத்தப்படுகின்றனர். அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க மறுக்கப்படுகிறது

இனவெறி, தவறான மற்றும் தீங்கு விளைவிக்கும் இது போன்ற விவகாரத்தை முடிவுக்கு கொண்டு வர ஊடகங்களுக்கு அழைப்பு விடுத்தார்.போலி செய்திகள் தொடர்ந்து ஆன்லைனில் பரவி வரும் நேரத்தில் டிஜிட்டல் கல்வியறிவில் கவனம் செலுத்த கல்வி நிறுவனங்களை கேட்டுக்கொண்டார்.

Next Story