இவான்கா டிரம்பின் தனி உதவியாளருக்கு கொரோனா பாதிப்புக்கான பரிசோதனை


இவான்கா டிரம்பின் தனி உதவியாளருக்கு கொரோனா பாதிப்புக்கான பரிசோதனை
x
தினத்தந்தி 9 May 2020 9:47 AM GMT (Updated: 9 May 2020 9:47 AM GMT)

இவான்கா டிரம்பின் தனி உதவியாளருக்கு கொரோனா பாதிப்புக்கான பரிசோதனை நடத்தப்பட்டு உள்ளது.

வாஷிங்டன்

இவான்கா டிரம்பின் தனிப்பட்ட உதவியாளர் கேடிக்கு  கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.  கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட மூன்றாவது வெள்ளை மாளிகை ஊழியராக அவர் உள்ளார். என்று ஒரு ஊடக அறிக்கை சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி  டொனால்ட் டிரம்பின் மகளுக்கு தனிப்பட்ட வகையில் அவர்  உதவியாளராக இருந்தார். ஆனால் பலவாரங்களாக அவர் இவான்கா டிரம்புடன் இல்லை.

ஏறக்குறைய இரண்டு மாதங்களாக அவர் தொலைபேசியில் பணிபுரிந்து வருகிறார், அவர் எச்சரிக்கைக்காக சோதனை செய்யப்பட்டுள்ளார்.

வெள்ளை மாளிகை இல்லத்தில் ஊழியர்கள் முககவசங்கள் அணிவதை இப்போது வெள்ளை மாளிகை உறுதி செய்து வருகிறது, மேலும் மேற்கு பகுதி முழுவதும் கொரோனா வைரஸ் சோதனைகள் மற்றும் வெப்பநிலை சோதனைகள் அதிகரிக்கப்படுகின்றன. வெஸ்ட் விங்  அடிக்கடி சுத்திகரிக்கப்படுகிறது என அதிகாரி ஒருவர் கூறினார்.

வெள்ளை மாளிகையின் கொரோனா வைரஸ் பணிக்குழுவை வழிநடத்தும் பென்ஸ், சமீபத்தில் மாயோ கிளினிக்கிற்கு முககவசம் அணியாமல் பயணம் மேற்கொண்டார்.

அரிசோனாவில் முககவசம் தயாரிக்கும் தொழிற்சாலை சுற்றுப்பயணத்தின் போது டிரம்ப் முககவசம் அணிய மறுத்துவிட்டார் என்பது குறிப்பிட தக்கது.


Next Story