பேஸ்புக் ஊழியர்கள் அடுத்த 5 முதல் பத்து ஆண்டுகளுக்கு வீட்டிலிருந்தே பணியாற்றுவார்கள் - மார்க் ஜுக்கர் பெர்க்


பேஸ்புக் ஊழியர்கள் அடுத்த 5 முதல் பத்து ஆண்டுகளுக்கு வீட்டிலிருந்தே பணியாற்றுவார்கள் - மார்க் ஜுக்கர் பெர்க்
x
தினத்தந்தி 22 May 2020 6:00 PM GMT (Updated: 22 May 2020 6:00 PM GMT)

பேஸ்புக்கின் 50 சதவீத ஊழியர்கள் அடுத்த 5 முதல் பத்து ஆண்டுகளுக்கு வீட்டிலிருந்தே பணியாற்றுவார்கள் என அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர் பெர்க் தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன்,

கொரோனா அச்சம் காரணமாக  பெரும்பாலான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களை வீடுகளில் இருந்து பணிபுரியுமாறு உத்தரவிட்டு உள்ளன. பிரபல சமூக வலைத்தளங்களான ‘பேஸ்புக்’(முகநூல்), டுவிட்டர் ஆகியவையும் உத்தரவிட்டது.

இந்தநிலையில் கொரோனா பரவல் உலகம் முழுவதும் பெரும்பாலான நாடுகளில் இன்னும் முழுமையாக கட்டுக்குள் வராமல் இருப்பதால் அமெரிக்காவின் பேஸ்புக் நிறுவனத்தின் பாதி ஊழியர்களை அடுத்த 5 முதல் 10 ஆண்டுகளுக்கு வரை வீட்டிலிருந்தே பணியாற்ற அந்நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி  மார்க் ஜுக்கர் பெர்க் தெரிவித்துள்ளார். இதன்படி 48,000க்கும் அதிகமான அந்நிறுவன ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்ற உள்ளனர்.

கொரோனா வைரஸ் சார்ந்த பிரச்சினைகளை எதிர்கொள்ள தங்களின் ஊழியர்களுக்கு ஆயிரம் டாலர் தொகையை (இந்திய மதிப்பில் சுமார் ரூ.74 ஆயிரம் ) போனசாக வழங்க பேஸ்புக் நிறுவனம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Next Story