ஒரே வீட்டில் கூடி பேசிய 10 இந்தியர்கள் மீது வழக்குப்பதிவு - சிங்கப்பூர் அரசு அதிரடி


ஒரே வீட்டில் கூடி பேசிய 10 இந்தியர்கள் மீது வழக்குப்பதிவு - சிங்கப்பூர் அரசு அதிரடி
x
தினத்தந்தி 22 May 2020 11:08 PM GMT (Updated: 22 May 2020 11:08 PM GMT)

சிங்கப்பூரில் ஒரே வீட்டில் கூடி பேசிய 10 இந்தியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்ப்பட்டுள்ளது.

சிங்கப்பூர்,

சிங்கப்பூரில் கொரோனாவை கட்டுப்படுத்த கடுமையான விதிமுறைகள் அமலில் உள்ளன. மற்ற வீடுகளுக்கு சென்று சந்திக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறுவோருக்கு 6 மாதம்வரை ஜெயில் தண்டனை, 10 ஆயிரம் சிங்கப்பூர் டாலர் அபராதம் ஆகியவை விதிக்கப்படும்.

இந்நிலையில், சிங்கப்பூரில் ஒரு வாடகை வீட்டில் குடியிருக்கும் ஒரு பெண், 2 ஆண்கள் கொண்ட இந்திய குடும்பத்தினர், தங்கள் வீட்டுக்கு ஒரு பெண், 6 ஆண்கள் என 7 இந்தியர்களை வரவழைத்தனர். அவர்களுடன் சேர்ந்து பேசி தேநீர் குடிப்பதும், படிப்பதுமாக இருந்தனர்.

இதை கண்டறிந்து 10 பேர் மீதும் சிங்கப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இவர்களில் சிலர் மாணவர்கள் ஆவர். தாங்கள் புதியவர்கள் என்பதால், விதிமுறைகள் தெரியாது என்று அவர்கள் தெரிவித்தனர்.

Next Story