உலக செய்திகள்

நேபாளத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 675- ஆக உயர்வு + "||" + Nepal reports highest single-day coronavirus surge; total cases cross 650-mark

நேபாளத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 675- ஆக உயர்வு

நேபாளத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 675- ஆக உயர்வு
நேபாளத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 72 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
காத்மாண்டு,

இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான நேபாளத்திலும் கொரோனா பாதிப்பு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. நேபாளத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், வரும் ஜூன் 2 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், கடந்த சில நாட்களாக அந்நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. 

இந்த நிலையில், கடந்த  24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு நேபாளத்தில் 72 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், அந்நாட்டில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 675 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பால் நேபாளத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.


தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22,752 பேருக்கு கொரோனா தொற்று
இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 7 லட்சத்துக்கு 42 ஆயிரத்தை கடந்துள்ளது.
2. ஆன்லைன் வகுப்புகள் - வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா கிடையாது; அமெரிக்கா
ஆன்லைனில் பயிலும் வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா கிடையாது என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.
3. இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 7 லட்சத்தை தாண்டியது
இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 7 லட்சத்தை தாண்டியது.
4. உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1.17 கோடியாக உயர்வு
உலக அளவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5.40 லட்சமாக உயர்ந்துள்ளது.
5. இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 24, 850- பேருக்கு கொரோனா தொற்று
இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு புதிய உச்சமாக கடந்த 24 மணி நேரத்தில் 24,850 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.