உலக செய்திகள்

அமெரிக்காவில் புதிதாக 20,634 பேருக்கு கொரோனா தொற்று உறுதி + "||" + Coronavirus confirmed 20,634 new infections in the United States

அமெரிக்காவில் புதிதாக 20,634 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

அமெரிக்காவில் புதிதாக 20,634 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
அமெரிக்காவில் ஒரே நாளில் புதிதாக 20,634 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வாஷிங்டன், 

சீனாவின் உகான் நகரில் உருவாகிய கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் பரவி அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் தோன்றிய சீனாவில் ஏற்படுத்திய பாதிப்பை விட ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்காவிலும் தான் கொரோனா வைரஸ் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

உலக அளவில் கொரோனா தொற்று இறப்பு விகிதத்தில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. இந்நிலையில் அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 20,634 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஜான் ஹாப்கின்ஸ் மருத்துவ பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

இதன்மூலம் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை தற்போது 16,86,765 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா தொற்றுக்கு நேற்று ஒரே நாளில் 633 பேர் உயிரிழந்ததால், அங்கு பலியானோர் எண்ணிக்கை 99,304 ஆக அதிகரித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. லடாக் எல்லை விவகாரம்: சீனாவிடம் ஏதோ ஒரு திட்டம் உள்ளது... வெள்ளை மாளிகை எச்சரிக்கை
லடாக் எல்லை விவகாரத்தில் சீனாவிடம் ஏதோ ஒரு திட்டம் இருக்கிறது... என வெள்ளை மாளிகை எச்சரித்து உள்ளது.
2. அமெரிக்காவில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 56 ஆயிரம் பேருக்கு கொரோனா
அமெரிக்காவில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 56 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
3. இந்தியா-சீனாவிற்கும் இடையே அதிகரித்து வரும் பதற்றங்கள்; உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம் -அமெரிக்கா
இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே அதிகரித்து வரும் எல்லை பதற்றங்கள் மற்றும் பாதுகாப்பு பிரச்சினைகள் தொடர்பாக உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம் என அமெரிக்கா கூறி உள்ளது.
4. 59 சீன மொபைல் செயலிகளுக்கு தடை அமெரிக்கா ஆதரவு
59 சீன செயலிகளுக்கு தடை அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளது
5. அமெரிக்காவின் ‘ஜி.பி.எஸ்.3’ செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது
அமெரிக்காவின் 3வது ‘ஜி.பி.எஸ்.3’ செயற்கைக்கோள் நேற்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.