நைஜீரியாவில் போகோஹரம் பயங்கரவாதிகள் 35 பேர் கொன்று குவிப்பு


நைஜீரியாவில் போகோஹரம் பயங்கரவாதிகள் 35 பேர் கொன்று குவிப்பு
x
தினத்தந்தி 25 May 2020 11:00 PM GMT (Updated: 25 May 2020 9:57 PM GMT)

நைஜீரியாவில் போகோஹரம் பயங்கரவாதிகள் 35 பேர் கொன்று குவிக்கப்பட்டனர்.

அபுஜா, 

ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோஹரம், ஐ.எஸ். உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத அமைப்புகள் செயல்பட்டுவருகிறது.

இந்த பயங்கரவாத குழுக்கள் பாதுகாப்பு படையினரையும், பொதுமக்களையும் குறிவைத்து அவ்வப்போது தாக்குதல் சம்பவங்களை அரங்கேற்றி வருகின்றனர். இந்த தாக்குதல்களுக்கு பாதுகாப்பு படையினரும் தக்க பதிலடி கொடுத்துவருகின்றனர்.

இந்த நிலையில், நைஜீரியாவின் போர்னோ மாகாணம் அட்சுங்கா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக ராணுவத்திற்கு ரகசியத்தகவல் கிடைத்தது.

இதையடுத்து அப்பகுதிக்கு விரைந்த ராணுவத்தினர் பயங்கரவாதிகளை குறிவைத்து அதிரடி தேடுதல் வேட்டை நடத்தினர். இந்த தேடுதல் வேட்டையில் அட்சுங்கா பகுதியில் பதுங்கி இருந்த 35 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

தேடுதல் வேட்டையின் போது பயங்கரவாதிகளால் திருடப்பட்ட கால்நடைகள், இரு சக்கர வாகனங்கள் மற்றும் செல்போன்கள் மீட்கப்பட்டன. மேலும் மிகப்பெரிய அளவில் ஆயுதங்களும், வெடிபொருட்களும் கைப்பற்றப்பட்டன.

பயங்கரவாதிகளுடன் நடந்த இந்த சண்டையில் நைஜீரிய படையினர் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story