உலக செய்திகள்

முகக்கவசத்திற்கு பதிலாக உள்ளாடையை பயன்படுத்திய பெண் சிசிடிவியில் பதிவான காட்சி + "||" + Instead of a mask The woman who used the underwear Viewed on CCTV

முகக்கவசத்திற்கு பதிலாக உள்ளாடையை பயன்படுத்திய பெண் சிசிடிவியில் பதிவான காட்சி

முகக்கவசத்திற்கு பதிலாக உள்ளாடையை பயன்படுத்திய பெண் சிசிடிவியில் பதிவான காட்சி
முகக்கவசத்திற்கு பதிலாக உள்ளாடையை பயன்படுத்திய பெண் சிசிடிவியில் பதிவான காட்சியால் அதிர்ச்சி
கீவ்

உக்ரைனில் இரண்டு குழந்தைகளின் தாய் தபால் நிலையம் ஒன்றிற்கு முகக்கவசம் அணியாமல் வந்ததால், அவர் தன்னுடைய உள்ளாடையை முகக்கவசமாக மாற்றிக் கொண்ட காட்சி அங்கிருக்கும் சிசிடிவி கமெராவில் பதிவாகியுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் உலகின் பலவேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ளது. இதன் காரணமாக பல்வேறு விதிகள் மற்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் உக்ரைன் நாட்டில் கடந்த ஏப்ரல் மாதத்தின் துவக்கத்தில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க புதிய கட்டுப்பாட்டு நடவடிக்கைகளாக, பொது இடத்திற்கு எங்கு சென்றாலும், தங்களின் அடையாள அட்டை எடுத்துச் செல்ல வேண்டும்.அதுமட்டுமின்றி, அனைத்து பொது இடங்களிலும் முகக்கவசம் அல்லது சுவாசக் கருவி அணிய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

குறிப்பாக இந்த விதிகள் நாட்டில் இருக்கும் கடைகள், சந்தைகள், சுரங்கப்பாதைகள், பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள் மற்றும் பொதுப் போக்குவரத்து உள்ளிட்ட இடங்களில் மக்கள் கட்டாயமாக முகக்கவசம் அணியும் படி வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில் கிவில் இருக்கும் தபால் நிலையம் ஒன்றிற்கு இரண்டு குழந்தைகளின் தாய் ஒருவர் முகக்கவசம் அணியாமல் வருகிறார். அப்போது அவர் அங்கு பணியாற்றும் ஊழியரிடம் பேசுவது போன்று உள்ளது.

அதன் பின் உடனடியாக தன்னுடைய உள்ளாடையை முகக்கவசமாக பயன்படுத்துகிறார். இது அங்கிருக்கும் சிசிடிவி கேமிராவில் பதிவாக, அதன் ஊழியர் ஒருவர் சமூகவலைத்தளங்களில் பதிவிட, தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

இருப்பினும் நிறுவனத்தின் இந்த வீடியோவை பகிர்ந்த அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.மேலும் இந்த வீடியோவைக் கண்ட இணையவாசி ஒருவர், அவள் ஒரு சரியான வழியை கண்டுபிடித்துள்ளார். முகக்கவசத்திற்கு பதிலாக உள்ளாடைகளை பயன்படுத்த யாரும் இதுவரை தடை விதிக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் கலெக்டர் சி.கதிரவன் உத்தரவு
பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று கலெக்டர் சி.கதிரவன் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-
2. வீட்டைவிட்டு வெளியே வந்தால் முகக் கவசம் அணியுங்கள்; மத்திய அரசு அறிவுரை
வீட்டைவிட்டு வெளியே வந்தால், வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட முகக் கவசம் அணியவேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
3. தமிழகம் முழுவதும் திருப்பூரில் இருந்து 1½ லட்சம் முகக்கவசம் வினியோகம்
தமிழகம் முழுவதும் திருப்பூரில் இருந்து 1½ லட்சம் முகக்கவசம் வினியோகம் செய்யப்பட்டுள்ளது.
4. ரெயில் பயணிகள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் - தாய்லாந்து அரசு உத்தரவு
தாய்லாந்தில் ரெயில் பயணிகள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என அரசு உத்தரவிட்டு உள்ளது.
5. டெல்லியில் ரேஷன் கடைகளில் முகக்கவசம், சானிடைசர் விற்க திட்டம்
டெல்லியில் ரேஷன் கடைகளில் முகக்கவசம், சானிடைசர் விற்க திட்டமிடப்பட்டுள்ளது.