சீனா அச்சுறுத்தல் : இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுடன் இணைந்து செயல்படுவோம் -அமெரிக்கா


சீனா அச்சுறுத்தல் : இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுடன் இணைந்து செயல்படுவோம் -அமெரிக்கா
x
தினத்தந்தி 1 Jun 2020 4:50 AM GMT (Updated: 1 Jun 2020 4:50 AM GMT)

சீனா அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுடன் இணைந்து பங்காளியாக செயல்படும் என அமெரிக்கா கூறி உள்ளது.

வாஷிங்டன்

சீன இராணுவத்தால் ஏற்படும் அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு, இந்தியா உள்பட உலகெங்கிலும் உள்ள பல நாடுகளுடன் அமெரிக்கா கூட்டாளியாக முடியும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக்கேல் பாம்பியோ தெரிவித்துள்ளார்.

அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மைக்கேல் பாம்பியோ கூறியதாவது:-

"சீன கம்யூனிஸ்ட்கட்சியின் இராணுவ முன்னேற்றங்களைப் பொறுத்தவரை, அவை உண்மையானவை. சீன அதிபர்  ஜி ஜின்பிங் தனது இராணுவ சக்தியை வளர்த்துக் கொள்ள விரும்புகிறார்.

இந்த அச்சுறுத்தலைப் உறுதிசெய்ய எங்களது பாதுகாப்புத் துறை தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறது. ஜனாதிபதி டிரம்ப்பின் கீழ் எனங்கள் பாதுகாப்புத் துறை, இராணுவம், தேசிய பாதுகாப்பு அமைப்பு  அமெரிக்க மக்களைப் பாதுகாக்கக்கூடிய  நிலையில் உள்ளது என்று நான் நம்புகிறேன்.

உண்மையில் உலகம் முழுவதும் இந்தியா,ஆஸ்திரேலியா, தென் கொரியா, ஜப்பான, பிரேசில்,ஐரோப்பா,  போன்ற கூட்டாளிகளுடன் இணைந்து நாங்கள் நல்ல பங்காளிகளாக செயல்பட முடியும் என கூறினார்.

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான சமீபத்திய எல்லை நிலைப்பாடு குறித்த கேள்விக்கு பதிலளித்த பாம்பியோ, "சீன கம்யூனிஸ்ட் கட்சி இந்த முயற்சியில்,  நீண்ட காலமாக இருந்து வருகிறது. அவர்கள் நிச்சயமாக  ஒரு தந்திரோபாய சூழ்நிலையைப் பயன்படுத்துவார்கள் அவர்கள் நீண்ட காலமாக இந்த அச்சுறுத்தல்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

பொருத்தமான, ஆனால் பதிலளிக்கும் நடவடிக்கைகளை எடுப்பதற்கும் தயாராக உள்ள ஒரு நிர்வாகம் எங்களிடம் உள்ளது, ஆனால் சீனாவின் முயற்சிகளில் இருந்து அமெரிக்க மக்களை பாதுகாக்கும் கடமையை நாங்கள் எடுத்துக்கொள்கிறோம் என கூறினார். 

Next Story