பாகிஸ்தானில் கொரோனா வைரசுக்கு எதிரான போரில் 63 சுகாதார பணியாளர்கள் பலி


பாகிஸ்தானில் கொரோனா வைரசுக்கு எதிரான போரில் 63 சுகாதார பணியாளர்கள் பலி
x
தினத்தந்தி 22 Jun 2020 2:42 PM GMT (Updated: 22 Jun 2020 2:42 PM GMT)

பாகிஸ்தானில் கொரோனா வைரசுக்கு எதிரான போரில் முன்களத்தில் நின்று பணியாற்றிய 63 சுகாதார பணியாளர்கள் பலியாகி உள்ளனர்.

லாஹூர்,

பாகிஸ்தானில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு 1.81 லட்சம் பேர் ஆளாகி உள்ளனர்.  இதுவரை 3,500க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.  71,450க்கும் கூடுதலானோர் சிகிச்சை முடிந்து குணமடைந்து சென்றுள்ளனர்.

அந்நாட்டில் கொரோனா வைரசுக்கு எதிரான போரில் நோயாளிகளை சிகிச்சை அளித்து பாதுகாப்பதற்காக மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பிற சுகாதார பணியாளர்கள் தீவிரமுடன் ஈடுபட்டு உள்ளனர்.

இந்த நிலையில், நோயாளிகளை குணப்படுத்தும் முயற்சியில் முன்களத்தில் நின்று பணியாற்றிய மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பிற சுகாதார பணியாளர்கள் என 63 பேர் பலியாகி உள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

Next Story