லடாக் எல்லை விவகாரம் மிகவும் தீவிரமான கவலைக்குரிய பிரச்சினையாகும் -இங்கிலாந்து பிரதமர்


லடாக் எல்லை விவகாரம் மிகவும் தீவிரமான கவலைக்குரிய பிரச்சினையாகும் -இங்கிலாந்து பிரதமர்
x
தினத்தந்தி 26 Jun 2020 3:03 AM GMT (Updated: 26 Jun 2020 3:03 AM GMT)

லடாக் எல்லை விவகாரம் மிகவும் தீவிரமான கவலைக்குரிய பிரச்சினையாகும் -இங்கிலாந்து பிரதமர்

லண்டன்

இங்கிலாந்து பாராளுமன்றத்தில், இந்தியா-சீனா இடையிலான மோதலால் இங்கிலாந்து நலனுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து பழமைவாத கட்சி உறுப்பினர் பிலிக் டிரம்மண்ட் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்து இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியதாவது:-

லடாக்கில் உள்ள சூழ்நிலை மிகவும் தீவிரமான, கவலைக்குரிய அம்சமாகும். இதை இங்கிலாந்து உன்னிப்பாக கவனித்து வருகிறது. எல்லை பிரச்சினையை தீர்க்க இந்தியாவும், சீனாவும் பேச்சுவார்த்தை நடத்துவதை நாங்கள் விரும்புகிறோம். அவர்களின் பேச்சுவார்த்தைகளை  ஒழுங்குபடுத்தவும்,  அதை  ஊக்குவிக்கவும் இங்கிலாந்து தயாராக உள்ளது என கூறினார்.

இந்தியா-சீனா இடையே கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக எல்லையில் பதற்றம் நீடித்து வரும் நிலையில் முதல்முறையாக அவர் கருத்து தெரிவித்து உள்ளார்.

அமெரிக்கா, ரஷ்யா ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் இருநாடுகளும் அமைதியான முறையில் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினையை தீர்க்க வேண்டும் என கூறி உள்ளன.


Next Story