உலக செய்திகள்

ஸ்காட்லாந்த் ஒட்டல் ஒன்றில் மர்ம நபர் நடத்திய தாக்குதலில் 3 பேர் பலி + "||" + Three people were originally feared dead after knife rampage in Park Inn hotel, West George Street

ஸ்காட்லாந்த் ஒட்டல் ஒன்றில் மர்ம நபர் நடத்திய தாக்குதலில் 3 பேர் பலி

ஸ்காட்லாந்த் ஒட்டல் ஒன்றில் மர்ம நபர் நடத்திய  தாக்குதலில் 3 பேர் பலி
ஸ்காட்லாந்தில் சொகுசு ஒட்டல் ஒன்றில் மர்ம நபர் நடத்திய கத்தி குத்து தாக்குதலில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
லண்டன்

இங்கிலாந்தின் ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் மேற்கு ஜார்ஜ் தெரிவில் சொகுசு ஒட்டல் ஒன்று உள்ளது. அந்த ஒட்டலில் வாடிக்கையாளர்களும், ஊழியர்களும் இன்று தங்கள் வழக்கமான வேலையில் ஈடுப்பட்டுக்கொண்டிருந்தனர்.

அப்போது அந்த ஓட்டலுக்குள் திடீரென்று கத்தியுடன் நுழைந்த மர்ம நபர் ஒருவன் அங்கு இருந்தவர்கள் மீது கத்தியால் கண்மூடித்தனமாக கொலைவெறித்தாக்குதல் நடத்தினான்.இதனால், அந்த ஓட்டலில் இருந்தவர்கள் அனைவரும் தங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள அங்கிருந்து தப்பி ஓட முயற்சித்தனர். அப்போது மர்ம நபர் அலறியடித்துக்கொண்டு ஓடிய மக்களை குறிவைத்து கொடூரமாக கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தினான்.இந்த தாக்குதல் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து சென்ற போலீசார் தாக்குதல் நடத்திய சந்தேக நபரை சுட்டுக்கொன்றனர். ஆனாலும், மர்ம நபர் நடத்திய இந்த கத்திக்குத்து தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும், 6 பேர் படுகாயமடைந்தனர். 

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் சிலருக்கு காயம் ஏற்பட்டிருப்பதாகவும், அந்த பகுதி முழுவதும் தற்போது போலீசாரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா சமூக தொற்றாக மாறுகிறதா இங்கிலாந்து நிபுணர் எச்சரிக்கை
கொரோனா வைரஸ் சமூகத்தில் பரவுவது உறுதி செய்யப்பட்டால், லீஸ்டர் போலவே லண்டனிலும் என்று நிபுணர் ஒருவர் எச்சரித்துள்ளார்.
2. லண்டனில் கூட்டம் ஒன்றில் நடந்த மோதலில் 22 போலீசார் காயம். வாகனங்கள் சேதம்
லண்டனில் சட்ட விரோதமாக நடந்த நிகழ்ச்சியில் ஏற்பட்ட மோதலில் 22 போலீசார் காயமடைந்துள்ளனர். போலீசாரின் பல வாகனங்கள் சேதமடைந்துள்ளன.
3. இங்கிலாந்தில் போராட்டத்தில் வன்முறை; 100 பேர் கைது
இங்கிலாந்தில் போராட்டத்தில் வன்முறை ஈடுபட்ட 100 பேர் கைது செய்யப்பட்டனர்.
4. கொரோனா வைரஸ் பாதிப்பு: இங்கிலாந்து முழுவதும் கலவரம் வெடிக்கக்கூடும் -நிபுணர் தகவல்
கொரோனா வைரஸின் விளைவுகளால் இந்த கோடையில் இங்கிலாந்து முழுவதும் கலவரம் வெடிக்கக்கூடும் என்று அறிவியல் ஆலோசகர் எச்சரித்துள்ளார்.
5. இங்கிலாந்தில் கொரோனா தொற்றால் பலியானோர் எண்ணிக்கை 41,128 ஆக உயர்வு
இங்கிலாந்தில் கொரோனா தொற்றால் பலியானோர் எண்ணிக்கை தற்போது 41,128 ஆக உயர்ந்துள்ளது.