உலக செய்திகள்

கொரோனா வைரஸ் இன்னும் இங்கிலாந்தில் அழியவில்லை - பிரதமர் போரிஸ் ஜான்சன் + "||" + The coronavirus is not yet extinct in the UKPrime Minister Boris Johnson

கொரோனா வைரஸ் இன்னும் இங்கிலாந்தில் அழியவில்லை - பிரதமர் போரிஸ் ஜான்சன்

கொரோனா வைரஸ் இன்னும் இங்கிலாந்தில் அழியவில்லை -  பிரதமர் போரிஸ் ஜான்சன்
கொரோனா வைரஸ் இன்னும் இங்கிலாந்தில் அழியவில்லை என்பதை மக்கள் உணர வேண்டும் என்று பிரதமர் போரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.
லண்டன்

உலகை தொடர் அச்சத்தில் வைத்திருக்கும் கொரோனாவால் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு அமலில் உள்ளது. இங்கிலாந்திலும் ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில், அங்குள்ள மக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் கடற்கரைகளிலும், தெருவோர கேளிக்கைகளிலும் ஈடுபடுவதாக புகார் எழுந்துள்ளது.

தெற்கு இங்கிலாந்தில் உள்ள போர்ன்மவுத் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கடற்கரைகளில் நேற்று குவிந்த ஆயிரக்கணக்கான மக்களே இதற்கு சான்றாக அமைந்துள்ளது.இந்நிலையில் வரும் 4-ஆம் தேதி முதல் இங்கிலாந்தில் ஊரடங்கு தளர்வுகள் அளிக்கப்பட உள்ளன. இதனால் விதிமுறைகள் பறக்கவிடப்பட்டு கொரோனா பரவல் மேலும் தீவிரமாகும் என அரசு அச்சம் அடைந்துள்ளது.

ஏற்கனவே ஊரடங்கு தளர்வு கூடாது என்று உலக சுகாதார அமைப்பு மற்றும் வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.இ

தையடுத்து லண்டனில் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் போரிஸ் ஜான்சன், ஜூலை 4-ல்தான் தளர்வுகள் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

விதிமுறைகளை பின்பற்றி கொரோனாவை வெல்ல வேண்டும். கொரோனா என்னைத் தாக்காது என்று இளைஞர்கள் சிலர் நினைக்கலாம்.அது உண்மையாக கூட இருக்கலாம். ஆனால் உங்கள் மூலம் முதியவர்களை தாக்கலாம். கொரோனா இன்னும் வெளியில்தான் காத்துக் கொண்டிருக்கிறது என்பதை மக்கள் உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும் என்றும் பிரதமர் போரிஸ் ஜான்சன் கேட்டுக் கொண்டுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவின் உடல் ஸ்ரீவில்லிபுத்தூரில் நல்லடக்கம்
காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவின் உடல் அவரது சொந்த ஊரான ஸ்ரீவில்லிபுத்தூரில் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது.
2. சென்னை நகரில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தெருக்களின் எண்ணிக்கை 1,106 ஆக அதிகரிப்பு
சென்னை நகரில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தெருக்களின் எண்ணிக்கை 1,106 ஆக அதிகரித்து உள்ளது.
3. தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கா? கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கா? விதிக்கப்படுமா என தெரியவரும்
4. கொரோனா கால சிறப்பு நிவாரண உதவியாக, நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு ரூ.2000 - தமிழக அரசு அறிவிப்பு
கொரோனா கால சிறப்பு நிவாரண உதவியாக, நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு ரூ.2000 என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
5. ரெம்டிசிவிர் மருந்தை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு மத்திய அரசு தடை
கொரோனாவுக்கு எதிரான போரில் முக்கிய பங்கு வகிக்கும் ரெம்டிசிவிர் மருந்தை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு மத்திய அரசு தடை விதித்து உள்ளது.