நேபாளத்தில் நிலச்சரிவு: 10 பேர் பலி, 40-க்கும் மேற்பட்டோர் மாயம்


representative image
x
representative image
தினத்தந்தி 10 July 2020 8:23 AM GMT (Updated: 10 July 2020 8:23 AM GMT)

நேபாளத்தில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி தற்போது வரை 10 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

காத்மாண்டு,

நேபாளத்தில் பெய்த கனமழையால் மைக்டி, ஜஜர்கோட், சிந்துபல்சோக் ஆகிய மூன்று மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கிய 50-க்கும் மேற்பட்டோரை தேடும் பணியில் அந்நாட்டு மீட்புக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில், நிலச்சரிவில் சிக்கியவர்களில் 10- பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். மேலும்  மாயமான 40-க்கும் மேற்பட்டோரை  தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

நேபாளத்தில் கடந்த இரு தினங்களாக கனமழை கொட்டி வருவதால் அந்நாட்டில் ஓடும் முக்கிய நதிகளில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும், 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.


Next Story