உலக செய்திகள்

நெல்சன் மண்டேலாவின் மகள் மரணம் + "||" + Death of Nelson Mandela's daughter

நெல்சன் மண்டேலாவின் மகள் மரணம்

நெல்சன் மண்டேலாவின் மகள் மரணம்
நெல்சன் மண்டேலாவின் மகள் மரணம் அடைந்தார்.
ஜோகன்னஸ்பர்க், 

தென்னாப்பிரிக்காவின் முதல் கறுப்பின அதிபர் நெல்சன் மண்டேலாவின் மகள் ஜிண்ட்ஸி மண்டேலா உடல் நலக்குறைவால் நேற்று உயிரிழந்தார். அவருக்கு வயது 59.

1985ம் ஆண்டுக்கு பிறகு ஜிண்ட்ஸி மண்டேலா சர்வதேச முக்கியத்துவம் பெற்ற நபராக மாறினார். ஏனெனில் அப்போதுதான், வெள்ளை சிறுபான்மை அரசாங்கம் நெல்சன் மண்டேலாவை சிறையில் இருந்து விடுவிக்க முன்வந்தது. ஆனால் போராட்டத்தை கைவிட கேட்டுக் கொண்டதால் மண்டேலா விடுதலையாக சம்மதம் தெரிவிக்கவில்லை.

தனது தந்தையின் இந்த முடிவை ஊடகங்களுக்கு வாசித்துக் காட்டியவர் ஜிண்ட்ஸி. இதன் மூலம் அவர் சர்வதேச அளவில் கவனம் பெற்றார். ஜிண்ட்ஸி மண்டேலா கடந்த 2015-ம் ஆண்டு முதல் டென்மார்க்கிற்கான தென்னாப்பிரிக்காவின் தூதராக இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. ரிஷிவந்தியம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. சிவராஜ் மரணம்
ரிஷிவந்தியம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. சிவராஜ் மரணமடைந்தார்.
2. சிறுநீரக கோளாறினால் பிரபல இந்தி பின்னணி பாடகி அனுராதா பட்வலின் மகன் மரணம்
சிறுநீரக கோளாறினால் பிரபல இந்தி பின்னணி பாடகி அனுராதா பட்வலின் மகன் மரணம் அடைந்தார்.
3. வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் மரணம்? - தலைவர் பொறுப்பை ஏற்க தயாராகும் தங்கை
வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் மரணமடைந்தாரா என்பது குறித்து மாறுபட்ட தகவல்கள் உலவி வருகின்றன.
4. ஐ.ஏ.எஸ். அதிகாரி டாக்டர் பீலா ராஜேஷின் தந்தை ஓய்வுபெற்ற போலீஸ் டி.ஜி.பி. எல்.என்.வெங்கடேசன் மரணம்
ஐ.ஏ.எஸ். அதிகாரி டாக்டர் பீலா ராஜேஷின் தந்தையும், ஓய்வுபெற்ற போலீஸ் டி.ஜி.பி.யுமான எல்.என்.வெங்கடேசன் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 81.
5. வடசென்னை பகுதியில் 5 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்த டாக்டர் மரணம்
வடசென்னை பகுதியில் வசதியற்ற ஏழைகளுக்காக 5 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்த டாக்டர் திருவேங்கடம் காலமானார். அவரது மறைவுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஆசிரியரின் தேர்வுகள்...