உலகளவில் கொரோனா பாதிப்பு 1,34,46,431 ஆக அதிகரிப்பு; அமெரிக்காவில் ஒருநாள் பாதிப்பு 65 ஆயிரத்தை கடந்தது


உலகளவில் கொரோனா பாதிப்பு 1,34,46,431 ஆக அதிகரிப்பு; அமெரிக்காவில் ஒருநாள் பாதிப்பு 65 ஆயிரத்தை கடந்தது
x
தினத்தந்தி 15 July 2020 2:09 AM GMT (Updated: 15 July 2020 2:09 AM GMT)

உலகளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,34,46,431 ஆக அதிகரித்து உள்ளது. அமெரிக்காவில் ஒருநாள் பாதிப்பு 65 ஆயிரத்தை கடந்தது.

வாஷிங்டன்

உலகம் முழுவதும் கொரோனாவால் பல்வேறு நாடுகளை சேர்ந்த 5,81,121 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 1,34,54,727 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 78,46,586 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 59,574 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

அமெரிக்காவில் ஒரே நாளில் 65,559 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 35,45,042 ஆக அதிகரித்து உள்ளது. கொரோனா தொற்றால் மேலும் 929 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பலி எண்ணிக்கை 1,39,137 ஆக உயர்ந்து உள்ளது.

பிரேசிலில் ஒரே நாளில் 43,245 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 19,31,204 ஆக அதிகரித்து உள்ளது. கொரோனா தொற்றால் ஒரே நாளில் 1,341 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பலி எண்ணிக்கை 74,262 ஆக உயர்ந்து உள்ளது

Next Story