ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் எடுத்து கொண்ட பிறகு எனது உடல் நிலையில் முன்னேற்றம் - பிரேசில் அதிபர் போல்சனோரா


ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் எடுத்து கொண்ட பிறகு  எனது  உடல் நிலையில் முன்னேற்றம்  - பிரேசில் அதிபர் போல்சனோரா
x
தினத்தந்தி 17 July 2020 8:17 PM IST (Updated: 17 July 2020 8:17 PM IST)
t-max-icont-min-icon

ஹைட்ராக்சிகுளோராகுயின் மருந்துகள் எடுத்துக்கொண்ட பிறகு தனது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக பிரேசில் அதிபர் தெரிவித்துள்ளார்.


கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிராக ஊரடங்கு தேவையில்லை எனக் கூறி கடும் விமர்சனங்களை சந்தித்தவர் பிரேசில் அதிபர் போல்சனோரா. இவருக்கு கடந்த வாரம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்ட அவர் மருத்துவ சிகிச்சை எடுத்து வருகிறார்.

நேற்று, இரண்டாவது முறையாக பிரேசில் அதிபருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஆனால்,  அதிலும் அவருக்கு கொரோனா பாசிட்டிவ் என்றே சோதனை முடிவுகள் வந்தன. இந்த நிலையில்,  இணையம் வாயிலாக உரையாடிய  போல்சனோரா, ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் எடுத்து கொண்ட பிறகு  தனது உடல் நிலை முன்னேற்றம் கண்டுள்ளது. ஆனால் இது தற்செயலாக நடந்ததா? அல்லது மாத்திரையில் பலனால் அடைந்ததா? என்று தெரியவில்லை. அதனை உட்கொள்ளுமாறு தான் யாரையும் அறிவுறுத்த போவதில்லை” என்றார். 

Next Story