உலக செய்திகள்

அமெரிக்காவிலும் டிக் டாக் செயலிக்கு சிக்கல்? தடை குறித்து பரிசீலிப்பதாக டிரம்ப் தகவல் + "||" + Microsoft In Talks To Acquire TikTok's US Ops As Trump Wants Ban: Report

அமெரிக்காவிலும் டிக் டாக் செயலிக்கு சிக்கல்? தடை குறித்து பரிசீலிப்பதாக டிரம்ப் தகவல்

அமெரிக்காவிலும் டிக் டாக் செயலிக்கு சிக்கல்? தடை குறித்து பரிசீலிப்பதாக டிரம்ப் தகவல்
அமெரிக்காவில் டிக் டாக் செயலிக்கு தடை விதிப்பது குறித்து பரிசீலிப்பதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன்,

லடாக் எல்லைப் பகுதியில், கடந்த  ஜூன் மாதம் 15-ம் தேதி இந்திய - சீன ராணுவத்தினர் இடையே நடைபெற்ற மோதலில் 20 இந்திய வீரர்கள் இறந்தனர். இதனால் எல்லையில் போர்ப் பதற்றம் ஏற்பட்டது. எல்லையில் நடந்த தாக்குதலைத் தொடர்ந்து, சீனப் பொருட்களை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்றும் சீன நிறுவனங்களின் செல்போன் செயலிகளை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசுக்குத் தொடர்ந்து கோரிக்கைகள் எழுந்தன.

அதன்படி, தேச நலனுக்கு எதிராகவும் தனிநபர் தரவுகள் பகிரப்படும் அபாயம் இருப்பதாகக் கூறி டிக் டாக் உள்ளிட்ட சீன செயலிகளுக்கு இந்தியா தடை விதித்தது.

இந்த நிலையில்,  சீனாவின் செயலியான டிக்டோக்கை தடை செய்வது குறித்து பரிசீலிப்பதாக  அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். ஏற்கனவே, கொரோனா வைரஸை பரப்பியதாக கூறி, சீனா மீது அமெரிக்கா கடும் கோபத்தில் இருக்கிறது. இதனால் இருநாடுகளுக்கும் இடையே மோதல் உருவாகி உள்ளது. இந்த நிலையில், சீனாவின் செயலியானா டிக்டோக்கை தடை செய்ய உள்ளதாக டிரம்ப் கூறி இருக்கிறார். டிக் டாக்கிற்கு பதிலாக வேறு மாற்று செயலியை உருவாக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே,   டிக் டாக் நிறுவனத்தின் அமெரிக்க செயல்பாடுகளை மட்டும் வாங்க மைக்ரோசாப்ட் நிறுவனம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும் ஒரு செய்திகள் வெளியாகியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்: டிரம்ப் - ஜோ பைடன் இடையே காரசார விவாதம்
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களான டிரம்ப்-ஜோ பைடன் இடையே முதல் நேரடி விவாதம் நடந்தது. இருவரும் காரசாரமாக விவாதம் நடத்தினர்.
2. அமெரிக்காவில் அமேசான் நிறுவனத்தில் துப்பாக்கிச் சூடு; பெண் தொழிலாளி பலி
அமெரிக்காவில் அமேசான் நிறுவனத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரு பெண் தொழிலாளி உயிரிழந்தார்.
3. அமெரிக்காவில் கலிபோர்னியா காட்டுத்தீயின் பேரழிவு தொடர்கிறது - பல்லாயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்
அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் காட்டுத்தீயால் ஏற்படும் பேரழிவு தொடர்ந்து வருகிறது.
4. அமெரிக்காவில் பயங்கரம்! வீட்டிற்குள் புகுந்த பலரை சுட்டுக் கொன்ற மர்ம நபர்
அமெரிக்காவில் மர்ம நபர் ஒருவன் வீட்டிற்குள் புகுந்த பணயக்கைதிகளாக பிடித்து வைத்திருந்த பலரை சுட்டுக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
5. 10 ஆண்டுகள் வருமான வரி செலுத்தவில்லை ஆனால் சிகை அலங்காரத்திற்கு மட்டும் டிரம்ப் செலவிட்ட தொகை..?
10 ஆண்டுகள் வருமான வரி செலுத்தவில்லை ஆனால் சிகை அலங்காரத்திற்கு மட்டும் ஓராண்டில் டிரம்ப் செலவிட்ட தொகை எவ்வளவு தெரியுமா?

ஆசிரியரின் தேர்வுகள்...