ஆப்கானிஸ்தானில் வெள்ளத்தில் சிக்கி 16 பேர் பலி


ஆப்கானிஸ்தானில் வெள்ளத்தில் சிக்கி 16 பேர் பலி
x
தினத்தந்தி 1 Aug 2020 10:49 PM GMT (Updated: 1 Aug 2020 10:49 PM GMT)

ஆப்கானிஸ்தானில் வெள்ளத்தில் சிக்கி 16 பேர் பலியாகி உள்ளனர்.

காபூல்,

ஆப்கானிஸ்தானில் கிழக்கு பகுதியில் உள்ள நங்கார்ஹார் மாகாணத்தில் நேற்று முன்தினம் முதல் இடைவிடாது கனமழை கொட்டி வருகிறது. இதனால் அங்கு உள்ள பல்வேறு மாவட்டங்களில் முக்கிய நீர் நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஊர்களுக்குள் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. ஏராளமான வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. மேலும் நூற்றுக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.

மழை வெள்ளம் காரணமாக அனைத்து வகையான பொது போக்குவரத்தும் முடங்கியுள்ளது. மின்சாரம் தகவல்தொடர்பு ஆகியவையும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் முடங்கியுள்ளது.

வெள்ளத்தில் சிக்கி இதுவரை 16 பேர் பலியானதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களில் பெரும்பாலானோர் சிறுவர்கள் என அந்தத் தகவல்கள் கூடுதலாக தெரிவிக்கின்றன.

வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு குழுவினர் குவிக்கப்பட்டு முழு வீச்சில் மீட்பு பணிகள் நடந்து வருவதாக ஆப்கானிஸ்தான் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story