உலக செய்திகள்

27-ந் தேதிவரை நிரவ் மோடிக்கு காவல் நீட்டிப்பு - லண்டன் கோர்ட்டு உத்தரவு + "||" + Nirav Modi remanded in custody till May 27 - London court order

27-ந் தேதிவரை நிரவ் மோடிக்கு காவல் நீட்டிப்பு - லண்டன் கோர்ட்டு உத்தரவு

27-ந் தேதிவரை நிரவ் மோடிக்கு காவல் நீட்டிப்பு - லண்டன் கோர்ட்டு உத்தரவு
நிரவ் மோடிக்கு 27-ந் தேதிவரை காவல் நீட்டிப்பு செய்து லண்டன் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
லண்டன்,

ரூ.13 ஆயிரம் கோடி வங்கி மோசடி, சட்டவிரோத பண பரிமாற்றம் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட வைர வியாபாரி நிரவ் மோடி, லண்டனுக்கு தப்பி ஓடினார். இந்தியாவின் வேண்டுகோளை ஏற்று கடந்த ஆண்டு மார்ச் மாதம் லண்டனில் அவர் கைது செய்யப்பட்டார். லண்டன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து அவரது காவல் நேற்று முடிவடைய இருந்ததால், சிறையில் இருந்தபடி, காணொலி காட்சி மூலம் லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் கோர்ட்டு நீதிபதி வனேசா பரைட்சர் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார்.

அதனைதொடர்ந்து நிரவ் மோடிக்கு 27-ந் தேதிவரை காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

1. நிரவ் மோடியை காப்பாற்ற காங்கிரஸ் தீவிர முயற்சி - பா.ஜனதா குற்றச்சாட்டு
கடன் மோசடி செய்த வைர வியாபாரி நிரவ் மோடியை காப்பாற்ற காங்கிரஸ் கட்சி தன்னால் இயன்ற அளவுக்கு முயற்சிக்கிறது என்று பா.ஜனதா குற்றம் சாட்டியுள்ளது.
2. நிரவ் மோடி, விஜய் மல்லையா உள்ளிட்ட 50 தொழில் அதிபர்களின் ரூ.68 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி - ரிசர்வ் வங்கி தகவல்
நிரவ் மோடி, மெகுல் சோக்சி, விஜய் மல்லையா உள்ளிட்ட 50 தொழில் அதிபர்கள் திருப்பி செலுத்தாத ரூ.68 ஆயிரம் கோடி வங்கி கடன் தள்ளுபடி செய்யப்பட்டு இருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்து உள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...