அண்டை நாடுகளுக்கு சொந்தமான பகுதியை அபகரிக்கும் தஜகிஸ்தான் பகுதியை குறிவைக்கும் சீனா


அண்டை நாடுகளுக்கு சொந்தமான பகுதியை அபகரிக்கும் தஜகிஸ்தான் பகுதியை குறிவைக்கும் சீனா
x
தினத்தந்தி 7 Aug 2020 4:31 PM GMT (Updated: 7 Aug 2020 4:31 PM GMT)

அண்டை நாடுகளுக்கு சொந்தமான பகுதியை அபகரிக்கும் சீனாவின் மேலாதிக்க போக்கு, தஜகிஸ்தான் என்ற மத்திய ஆசிய நாட்டிற்கும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

பீஜிங்

சீனாவுக்கும், குட்டி ஏழை நாடான தஜகிஸ்தானுக்கும் 2010ஆம் ஆண்டில் எல்லை ஒப்பந்தம் ஏற்பட்டது. இதன்படி, பாமீர் பகுதியில் ஆயிரத்து 158 சதுரகிலோ மீட்டர் பரப்பை சீனாவிற்கு விட்டுக்கொடுக்கும் நிர்ப்பந்தத்திற்கு தஜகிஸ்தான் ஆளானது.

இந்நிலையில், சீனாவின் அதிகாரப்பூர்வ ஊடகங்கள், ஒட்டுமொத்த பாமீர் பகுதியும் தங்களுக்கே சொந்தம் என பிரச்சாரம் செய்யத் தொடங்கியிருப்பதால், தஜிக்கிஸ்தான் கவலையில் ஆழ்ந்துள்ளது.

சீனாவின் புராதனமான பகுதியான பாமீர், உலக வல்லரசுகளின் அழுத்தம் காரணமாக, 128 ஆண்டுகளாக சீனாவுக்கு வெளியே இருப்பதாக, சீன வரலாற்று ஆய்வாளர் ஒருவர் கூறியுள்ளார். தஜகிஸ்தானில் உள்ள தங்கச் சுரங்கங்களையும் சீனா குறிவைத்திருப்பதாக கூறப்படுகிறது.


Next Story