பெய்ரூட் வெடி விபத்தால் மொத்த சேத மதிப்பு எவ்வளவு தெரியுமா? உலக வங்கி வெளியிட்ட தகவல்


பெய்ரூட் வெடி விபத்தால் மொத்த சேத மதிப்பு எவ்வளவு தெரியுமா? உலக வங்கி வெளியிட்ட தகவல்
x
தினத்தந்தி 1 Sep 2020 4:00 PM GMT (Updated: 1 Sep 2020 4:00 PM GMT)

பெய்ரூட்டில் 190 பேர் உயிரைப்பறித்த சக்தி வாய்ந்த வெடி விபத்தால் சுமார் 3.4 பில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான சேதம் ஏற்பட்டுள்ளதாக உலக வங்கி கணக்கிட்டுள்ளது.

பெய்ரூட்

கடந்த 2014 முதல் பெய்ரூட் துறைமுகத்தில் பாதுகாக்கப்பட்டு வந்த ரசாயனம் காரணமாகவே இந்த வெடி விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த வெடி விபத்தானது ஜப்பானில் அமெரிக்கா வீசிய அணுகுண்டில் பத்தில் ஒரு பங்கு வீரியம் கொண்டது என நிபுணர்களால் கணிக்கப்பட்டுள்ளது.

இதில் 190 பேர் கொல்லப்பட்டதுடன், சுமார் 6,000 பேர் காயங்களுடன் தப்பியுள்ளனர்.மட்டுமின்றி கிட்டத்தட்ட 300,000 மக்கள் வீடற்றவர்களாகவும் முழு சுற்றுவட்டாரத்தையும் துறைமுகத்தையும் இந்த வெடி விபத்து சேதப்படுத்தியுள்ளது.

பொருளாதாரம், அரசியல் மற்றும் சமூக சிக்கல்களால் தடுமாறி வந்த லெபனான் நாட்டில் இந்த கோர விபத்தால் மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் அருங்காட்சியகங்கள் உள்ளிட்டவையும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.இந்த வெடி விபத்துக்கு முன்னர், லெபனான் நவீன வரலாற்றில் அதன் மோசமான பொருளாதார மற்றும் நிதி நெருக்கடியை எதிர்கொள்வதாகக் கூறப்பட்டது.

நாட்டின் கடன் தற்போது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 170% ஆக உள்ளது.இந்த நிலையில், பெய்ரூட் நகரத்தை மொத்தமாக சிதைத்த வெடி விபத்தால் சுமார் 2.8 பில்லியன் பவுண்டுகள் முதல் 3.4 பில்லியன் பவுண்டுகள் வரை சேதம் ஏற்பட்டிருக்கலாம என உலக வங்கி கணித்துள்ளது.

மேலும், லெபனான் பொருளாதாரத்தில் இந்த வெடி விபத்து 2.6 பில்லியன் பவுண்டுகள் இழப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் உலக வங்கி கணித்துள்ளது.பெய்ரூட்டில் பொதுத்துறை புனரமைப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்காக 2020-2021 காலகட்டத்தில் சுமார் 1.35 பில்லியன் பவுண்டுகள் முதல் 1.54 பில்லியன் பவுண்டுகளை வரை தேவைப்படும் என கணிக்கப்பட்டுள்ளது.


Next Story