உலக செய்திகள்

அமெரிக்காவில் நீர்வீழ்ச்சியில் செல்பி எடுக்க முயன்ற இளம்பெண் கால் தவறி நீருக்குள் மூழ்கி மரணம் + "||" + Andhra woman dies after taking selfie in waterfall in America

அமெரிக்காவில் நீர்வீழ்ச்சியில் செல்பி எடுக்க முயன்ற இளம்பெண் கால் தவறி நீருக்குள் மூழ்கி மரணம்

அமெரிக்காவில் நீர்வீழ்ச்சியில் செல்பி எடுக்க முயன்ற இளம்பெண் கால் தவறி நீருக்குள் மூழ்கி மரணம்
அமெரிக்காவில் உள்ள பால்ட் ரிவர் நீர்வீழ்ச்சியில் செல்பி எடுக்க முயன்ற ஆந்திராவை சேர்ந்த இளம்பெண் கால் சறுக்கி விழுந்து நீருக்குள் மூழ்கி உயிரிழந்தார்.
வாஷிங்டன்,

ஆந்திரா மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தை சேர்ந்தவர் கமலா. பொறியியல் பட்டதாரியான இவர் மேல்படிப்புக்காக அமெரிக்கா சென்று படித்து தற்போது அங்கு அவருக்கு வேலையும் கிடைத்தது. அவருக்கு திருமணமும் நிச்சயிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் அடிலாண்டாவில் உள்ள உறவினர் வீட்டுக்கு தனது வருங்கால கணவருடன் சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து அவர்களது வீட்டுக்கு திரும்பியுள்ளனர். அப்போது வழியில் இருந்த பால்ட் ரிவர் நீர்வீழ்ச்சியில் இருவரும் செல்பி எடுக்க முயன்றுள்ளனர்.

எதிர்பாராத விதமாக கால் சறுக்கி இருவருமே நீருக்குள் வீழ்ந்தனர். அதில் கமலா நீருக்குள் மூழ்கி இறந்த நிலையில் மீட்கப்பட்டார். அவரது வருங்கால கணவரை மீட்பு படையினர் காயங்களுடன் காப்பாற்றினர்.

கமலாவின் உடலை இந்தியா கொண்டு வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.