உலக செய்திகள்

தேங்காய் பற்றாக்குறையை கூற தென்னை மரத்தில் ஏறிய இலங்கை மந்திரியால் பரபரப்பு + "||" + Coconut shortage; Excitement by the Sri Lankan minister who climbed the coconut tree

தேங்காய் பற்றாக்குறையை கூற தென்னை மரத்தில் ஏறிய இலங்கை மந்திரியால் பரபரப்பு

தேங்காய் பற்றாக்குறையை கூற தென்னை மரத்தில் ஏறிய இலங்கை மந்திரியால் பரபரப்பு
இலங்கையில் தேங்காய் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது என மக்களிடம் கூற மந்திரி ஒருவர் தென்னை மரத்தில் ஏறியது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
கொழும்பு,

இலங்கையில் மாநில மந்திரியாக இருப்பவர் அருந்திகா பெர்னாண்டோ.  நாட்டில் தேங்காய் விளைச்சல் அதிகமின்றி பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது என்ற தகவலை மக்களிடம் கூற வேண்டும் என நினைத்து உள்ளார்.

இதற்கு இவர் மேற்கொண்ட வழி பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.  அவர் தென்னை மரமொன்றில் ஏறியுள்ளார்.  அதில் இருந்தபடியே மக்களை நோக்கி பேசிய அவர், உள்ளூர் தொழிற்சாலைகளுக்கு மற்றும் உள்நாட்டு நுகர்வுக்கு தேவையான 70 கோடி தேங்காய்கள் நாட்டில் பற்றாக்குறையாக உள்ளது.

தென்னை மரங்களை வளர்ப்பதற்கு கிடைக்க கூடிய ஒவ்வொரு நில பகுதியையும் நாம் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.  தேங்காய் தொழிற்சாலையை ஊக்கப்படுத்த வேண்டும்.  இதனால் நாட்டின் அந்நிய செலாவணி உயரும்.

தேங்காய் விலை விவகாரத்திற்கு தீர்வு காணும் வகையில், நாட்டில் தேங்காய் பற்றாக்குறையை முன்னிட்டு அதன் விலையை குறைக்க அரசு யோசித்து வருகிறது என அவர் கூறியுள்ளார்.  எனினும் அவரை மரத்தில் இருந்து இறங்க செய்ய அவரது ஆதரவாளர்கள் பெரும் போராட்டமே நடத்தியுள்ளனர்.  இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டு விட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. திண்டுக்கல் லியோனி சுவரொட்டியை கிழித்த தி.மு.க.வினரால் பரபரப்பு
திண்டுக்கலில் தி.மு.க.வின் கொள்கை பரப்பு செயலாளர் லியோனி சுவரொட்டியை அக்கட்சியினரே கிழித்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
2. கந்துவட்டி கொடுமையால் மனைவி, மகனுடன் விவசாயி தீக்குளிக்க முயற்சி சேலம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு
கந்துவட்டி கொடுமையால் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் மனைவி, மகனுடன் விவசாயி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
3. வீட்டை மீட்டு தரக்கோரி பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு
வீட்டை மீட்டு தரக்கோரி பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.
4. களியக்காவிளை காய்கறி சந்தையில் வரி வசூலிப்பதில் மோதல் போலீஸ் நிலையம் முற்றுகையால் பரபரப்பு
களியக்காவிளை காய்கறி சந்தையில் தீர்வை வசூலிப்பதில் ஏற்பட்ட மோதலால் வியாபாரிகள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
5. நடிகை கங்கனா ரணாவத் பங்களாவில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது மும்பை மாநகராட்சி நடவடிக்கையால் பரபரப்பு
நடிகை கங்கனா ரணாவத் பங்களாவில் சட்டவிரோத கட்டுமானம் கட்டப்பட்டு இருப்பதாக கூறி மும்பை மாநகராட்சி அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.