உலக செய்திகள்

கொரோனா இரண்டாவது அலை ஊரடங்கு இங்கிலாந்தில் அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு அச்சம் + "||" + Blockage leaves waste toilet paper strewn over street close to homes

கொரோனா இரண்டாவது அலை ஊரடங்கு இங்கிலாந்தில் அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு அச்சம்

கொரோனா இரண்டாவது அலை ஊரடங்கு இங்கிலாந்தில் அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு அச்சம்
கொரோனா 2 வது அலை ஊரடங்கு அச்சத்தால் இங்கிலாந்தில் மீண்டும் டாய்லெட் பேப்பர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
லண்டன்

கொரோனா கட்டுப்பாடுகளால் மீண்டும் அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சம் இங்கிலாந்து மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. பல்பொருள் அங்காடிகளில் குவியும் மக்கள் டாய்லெட் பேப்பர் முதல் அத்தியாவசியப் பொருட்களை வாங்கிக் குவிப்பதால் கடைகளில் ஷெல்ப்கள் காலியாக இருக்கின்றன.

பல்பொருள் அங்காடிகள் தங்களிடம் போதுமான ஸ்டாக் இருப்பதாக அறிவித்தாலும், வார இறுதியில் கடைகளுக்கு சென்ற பிரித்தானியர்கள் ஷெல்ப்கள் காலியாக இருப்பதைக் கண்டு அதிர்ச்சியுற்றனர்.

இதனால் முன்போலவே மீண்டும் பொருட்களை வாங்கிக் குவிக்கவேண்டும் என்ற அச்சம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது தெளிவாகவே தெரியவந்துள்ளது.இன்னொரு பக்கம், சில பிரபல பல்பொருள் அங்காடிகள், கடைகளுக்கு கூடும் மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்காக பாதுகாவலர்களை நிறுத்த இருப்பதாக அறிவித்துள்ளன. 

இதற்கிடையில், கடைகளுக்கு சென்று டாய்லெட் பேப்பர் முதலான பொருட்கள் இல்லாமல் ஏமாற்றமுற்ற மக்கள், சமூக ஊடகங்களில் காலியாக இருக்கும் ஷெல்ப்களை படம்பிடித்து பதிவேற்றம் செய்து வருகிறார்கள்.


தொடர்புடைய செய்திகள்

1. இங்கிலாந்தில் விடுதலைப்புலிகள் மீதான தடை நீக்கம்- இலங்கை அரசு மேல்முறையீடு
விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீதான தடையை இங்கிலாந்து நீக்கியது. இதை எதிர்த்து இலங்கை அரசு மேல்முறையீடு செய்துள்ளது.
2. இந்தியா முழுவதும் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி...!! மத்திய அரசு ரூ.51647 கோடி ஒதுக்கீடு,,?
இந்தியா முழுவதும் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி மத்திய அரசு ரூ.51642 கோடி ( 7 பில்லியன் டாலர்கள் ) ஒதுக்கீடு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
3. தடுப்பூசி தற்காலிகமானது... கொரோனாவை ஒழிக்க முடியாது -நிபுணர் கருத்து
கொரோனா தொற்று நிரந்தரமாக மனித சமூகத்தில் இருக்கும் என்றும், ஆனால் தடுப்பூசி ஒரு தற்காலிகத் தீர்வினை வழங்கும் என லண்டன் நிபுணர் கூறி உள்ளார்.
4. இந்தியப் பொருளாதாரம் “மறுமலர்ச்சியின் வாசலில்”உள்ளது - ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி கந்த தாஸ்
கொரோனா தாக்கத்திற்கு பிறகு இந்தியப் பொருளாதாரம் “மறுமலர்ச்சியின் வாசலில்”உள்ளது என ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி கந்த தாஸ்கூறினார்.
5. முதற்கட்ட தடுப்பு ஊசி அடுத்த ஆண்டு ஜனவரி - ஜூன் மாதம் வரை வழங்கத் திட்டம் - மத்திய சுகாதாரத்துறை செயலாளர்
முதற்கட்ட தடுப்பு மருந்து அடுத்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் தெரிவித்தார்.