உலகைச் சுற்றி...


உலகைச் சுற்றி...
x
தினத்தந்தி 28 Sep 2020 10:00 PM GMT (Updated: 28 Sep 2020 8:20 PM GMT)

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் 2 மாதங்களுக்கும் மேலாக காட்டு தீ பற்றி எரிந்து வருகிறது.

* அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் 2 மாதங்களுக்கும் மேலாக காட்டு தீ பற்றி எரிந்து வருகிறது. இந்த ஆண்டில் மட்டும் கலிபோர்னியா காட்டு தீயில் 30 லட்சத்து 60 ஆயிரம் ஏக்கர் வனபரப்பு எரிந்து சாம்பலானதாகவும், இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளதாகவும் கலிபோர்னியா மாகாண அரசு தெரிவித்துள்ளது.

* பிரேசிலில் நேற்று ஒரே நாளில் 14 ஆயிரத்து 318 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதன் மூலம் அந்த நாட்டில் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 47 லட்சத்து 32 ஆயிரத்து 309 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் அங்கு கொரோனா பலி எண்ணிக்கை 1 லட்சத்து 41 ஆயிரத்தை கடந்துள்ளது.

* ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தை குறிவைத்து தொடர்ந்து ராக்கெட் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதால், அமெரிக்கா தனது தூதரகத்தை மூட முடிவு செய்துள்ளதாகவும் 2 அல்லது 3 மாதங்களுக்குள் இந்த தூதரகம் மூடப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

* சர்ச்சைக்குரிய தென் சீன கடலில் சீனா ராணுவ சாவடிகளை அமைத்து தென் சீன கடல் மீதான ஆக்கிரமிப்பை உறுதிப்படுத்த முயல்வதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.

* ஆப்கானிஸ்தானின் வடக்கு பகுதியில் உள்ள குண்டூஸ் மாகாணத்தில் ராணுவ வீரர்களின் சோதனைச்சாவடிகளை குறிவைத்.து தலீபான் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் ராணுவ வீரர்கள் 12 பேர் கொல்லப்பட்டனர்.

* தென்கொரியாவைச் சேர்ந்த மீன்வளத்துறை அதிகாரி ஒருவர் வடகொரிய ராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக தென்கொரிய மக்களிடம் அதிபர் மூன் ஜே இன் மன்னிப்பு கோரினார். நாட்டின் ஒரு குடிமகனை பாதுகாக்கும் பொறுப்பில் தனது அரசாங்கம் தோல்வியுற்றதாக கூறி அவர் வருத்தம் தெரிவித்தார்.

Next Story