அஜர்பைஜான் படை வீரர்கள் 790 பேர் உயிரிழப்பு, ஆர்மீனிய பாதுகாப்பு அமைச்சகம் தகவல்; அதிகரிக்கும் பதற்றம்


அஜர்பைஜான் படை வீரர்கள் 790 பேர் உயிரிழப்பு, ஆர்மீனிய பாதுகாப்பு அமைச்சகம் தகவல்; அதிகரிக்கும் பதற்றம்
x
தினத்தந்தி 30 Sep 2020 12:57 AM GMT (Updated: 30 Sep 2020 12:57 AM GMT)

ஆர்மீனிய பாதுகாப்பு அமைச்சகம் 137 கவச வாகனங்கள் மற்றும் 72 ட்ரோன்கள் அழிக்கப்பட்டதாகவும், அஜர்பைஜான் படைகளில் 790 பேர் உயிரிழந்ததாகவும் தெரிவித்துள்ளது

நாகோர்னோ-கராபக்

ஆர்மீனியா-அஜர்பைஜான் இரு தரப்பினரும் நாகோர்னோ-கராபக் பிராந்தியத்தில் கடந்த சில நாட்களாக  மோதல்களில் ஈடுபட்டுள்ளனர், ஒருவருக்கொருவர் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டி வருகின்றனர்.

ஆர்மீனியாவிற்கும் அஜர்பைஜானுக்கும் இடையிலான நெருக்கடி தீவிரமடைந்து வருவதால், சண்டையை நிறுத்த தூதரக முயற்சிகள் நடந்து வருகின்றன.

நீண்டகாலமாக நிலவும் மோதலுக்கு தீர்வு காண ரஷியா, பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா தலைமையிலான மின்ஸ்க் குழுமத்தின் அவசர கூட்டத்திற்கு பிரான்ஸ் அழைப்பு விடுத்துள்ளது.

செவ்வாய்க்கிழமை மூன்றாவது நாளாக தொடர்ந்த கடுமையான சண்டையில் இதுவரை 10க்கும் மேற்பட்ட வீரர்கள் மற்றும் குறைந்தது 11 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

ஐ.நா மற்றும் சர்வதேச சமூகம் உடனடியாக போர்நிறுத்தம் மற்றும் பேச்சுவார்த்தை தீர்வுக்கு அழைப்பு விடுத்துள்ளன.

அதே நேரத்தில், ஆர்மீனிய மற்றும் அஜர்பைஜான் வீரர்கள் ஒருவருக்கொருவர் எதிரான நடவடிக்கைகள் மற்றும் தாக்குதல்களின் பல வீடியோக்களை வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில், நாகோர்னோ-கராபக்கின் இராணுவம் இக்லா மேற்பரப்பில் இருந்து வான் ஏவுகணைகளைப் பயன்படுத்தி இரண்டு ஆஜர்பைஜான் ஹெலிகாப்டர்களை வீழ்த்தியுள்ளது என்று ஆர்மீனிய பாதுகாப்பு அமைச்சின் பத்திரிகை செயலாளர் சுஷான் ஸ்டெபன்யன் அறிவித்தார்.

மேலும், நாகோர்னோ-கராபக்கின் உள்ளூர் படைகள் விமானத்தை தாக்கிய சித்தரிக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

நாகோர்னோ-கராபாக் ஆயுதப்படைகள் கிழக்கு திசையிலிருந்து நெருங்கும் இரண்டு எதிரி ஹெலிகாப்டர்களை இக்லாவைப் பயன்படுத்தி அழித்தன என்று ஸ்டெபன்யன் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

ஆர்மீனிய பாதுகாப்பு அமைச்சகம்  137 கவச வாகனங்கள் மற்றும் 72 ட்ரோன்கள் அழிக்கப்பட்டதாகவும், அஜர்பைஜான் படைகளில் 790 பேர் உயிரிழந்ததாகவும் தெரிவித்துள்ளது


Next Story