உலக செய்திகள்

இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு: போரிஸ் ஜோன்சன் கடுமையான தேசிய கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்த திட்டம் + "||" + UK Government Mulling Fresh Restrictions Amid Virus Spike

இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு: போரிஸ் ஜோன்சன் கடுமையான தேசிய கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்த திட்டம்

இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு: போரிஸ் ஜோன்சன் கடுமையான தேசிய கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்த திட்டம்
இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் பிரதமர் போரிஸ் ஜோன்சன் கடுமையான தேசிய கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்த வேண்டிய அழுத்தத்தை எதிர்கொள்கிறார்.
லண்டன்

இங்கிலாந்தில்  கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கடந்த 24 மணி நேரத்தில் மீண்டும் உச்சத்தை தொட்டுள்ளதால், போரிஸ் ஜோன்சன் கடுமையான தேசிய கட்டுப்பாடுகளை அறிவிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரித்தானியாவில் சமீப நாட்களாக கொரோனாவால் புதிதாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது.

கடந்த 30-ஆம் தேதி புதன் கிழமை கொரோனாவால் புதிதாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 7,108-ஆக பதிவாகியிருந்தது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், இங்கிலாந்தில் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 14,162-ஐ எட்டியுள்ளது. இதனால் கொரோனா பரவல் மீண்டும் உச்சத்தை தொட்டுள்ளது.

ஒரு வாரகால இடைவெளியில் தினசரி தொற்று நோயின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது. தொற்று நோய் துவங்கியதில் இருந்து இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை பிரித்தானியாவில் 544, 275-ஆக உள்ளது.

சுகாதாரத் துறையின் புள்ளிவிவரங்கள் கொரோனாவில் இருந்து, கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 70 இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.இதன் மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42-ஆயிரத்தை தாண்டியுள்ளது. ஆனால் இந்த நோய் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் மட்டும், சுமார் 3,145 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

410 பேர் வெண்டிலேட்டர் சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது. நாட்டில் நாள் ஒன்றிற்கு கொரோனாவால் புதிதாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை சராசரியாக 780-ஆக உயர்வதால், பிரதமர்  போரிஸ் ஜோன்சன் கடுமையான தேசிய கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்த வேண்டிய அழுத்தத்தை எதிர்கொள்கிறார்.

மேலும்,இங்கிலாந்தில்  கொரோனா வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்த உள்ளூர் நடவடிக்கைகள் அந்தளவிற்கு திரும்பதிகரமாக இல்லை என்று புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதால், வடக்கு இங்கிலாந்தில் உள்ள பப்கள் மூடப்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.

தொழிற்கட்சியின் ஒரு பகுப்பாய்வு இரண்டு மாதங்களாக உள்ளூர் ஊரடங்காக உள்ள 20 பகுதிகளில், 19 இடங்களில் தொற்று விகிதங்கள் அதிகரித்து வருவதாகக் கண்டறியப்பட்டது. இதனால் அரசாங்கத்தின் விஞ்ஞான ஆலோசனைக் குழுவின் உறுப்பினரான பேராசிரியர் கலாம் செம்பிள், வைரஸ் பரவலை தடுக்கும் முயற்சிக்காக சதேசிய அடிப்படையில் கொண்டுவர வேண்டும் என்று பரிசீலிக்க பரிந்துரைத்துள்ளார் என்பது நினைவுகூரத்தக்கது.தொடர்புடைய செய்திகள்

1. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் டெல்லியில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்
2. இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சிலின் ஓவியத்தை ரூ.71 கோடிக்கு விற்ற நடிகை ஏஞ்சலினா ஜோலி
இங்கிலாந்தில் கடந்த 1940 முதல் 1945 வரை பிரதமராக இருந்தவர் வின்ஸ்டன் சர்ச்சில்.‌ அரசியல்வாதி, ராணுவ அதிகாரி, எழுத்தாளர் என பன்முகங்களை கொண்ட இவர் சிறந்த ஓவியராகவும் திகழ்ந்து வந்தார்.
3. தனியார் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட கமல்ஹாசன்
சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் நடிகர் கமல்ஹாசன்.
4. இந்தியா - இங்கிலாந்து இடையேயான ஒருநாள் போட்டியை நேரில் காண ரசிகர்களுக்கு அனுமதி இல்லை
டெஸ்ட் போட்டியை நேரில் பார்க்க 50 சதவீதம் ரசிகர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஒரு நாள் ஆட்டங்கள் வெறிச்சோடிய மைதானத்தில் அரங்கேற இருப்பது குறிப்பிடத்தக்கது.
5. தமிழகத்தில் 9, 10, 11-ம் வகுப்பு மாணவர்கள் தேர்வெழுதாமலேயே அனைவரும் பாஸ் - முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் இயங்காத நிலையில், 9, 10, 11-ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வின்றி தேர்ச்சி பெறுவதாக தமிழக முதல்வர் பழனிசாமி சட்டசபையில் இன்று அறிவித்துள்ளார்.