கிர்கிஸ்தானின் ஜனாதிபதி சூரன்பே ஜீன்பெகோவ் பதவி விலகல்


கிர்கிஸ்தானின் ஜனாதிபதி சூரன்பே ஜீன்பெகோவ் பதவி விலகல்
x
தினத்தந்தி 15 Oct 2020 10:10 AM GMT (Updated: 15 Oct 2020 10:10 AM GMT)

நாட்டில் அரசியல் அமைதியின்மைக்கு மத்தியில் கிர்கிஸ்தானின் ஜனாதிபதி சூரன்பே ஜீன்பெகோவ் வியாழக்கிழமை பதவி விலகினார்.

பிஷ்கெக்

கிர்கிஸ்தானில் அக்டோபர் 4 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் ஜனாதிபதி சூரன்ன்பே பதவி விலக  எதிர்ப்பாளர்கள் வீதிகளில் இறங்கி போராடினர்.  ஜீன்பெகோவின் கூட்டாளிகள் வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டனர் பின்னர் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

புதிய தேர்தல்கள் அறிவிக்கப்பட்ட பின்னர் ராஜினாமா செய்வதாக ஜீன்பெகோவ் கூறியிருந்தார். அமைதியின்மை தொடர்ந்த நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் துணைத் தலைவர் டிமிட்ரி கோசக் ஜீன்பெகோவ் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஜபரோவ் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்த நாட்டுக்கு வந்தார்.

போராட்டத்தால் கலவரம் வெடிதத்தால்  ஜன்பெகோவ்  அவசரகால நிலைவிதித்ததால் ஒருவர் கொல்லப்பட்டதில் குறைந்தது 1,200 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த நிலையில் நாட்டில் அரசியல் அமைதியின்மைக்கு மத்தியில் கிர்கிஸ்தானின் ஜனாதிபதி சூரன்பே ஜீன்பெகோவ் வியாழக்கிழமை பதவி விலகினார்.

ஜனாதிபதி சூரன்பே ஜீன்பெகோவ் கூறியதாவது:-

நான் அதிகாரத்தில் ஒட்டிக்கொண்டு இருக்க விரும்பவில்லை. கிர்கிஸ்தான் வரலாற்றில் அதன் மக்கள் மீது இரத்தக்களரி மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்த அனுமதித்த ஒரு ஜனாதிபதியாக நான் இருக்க விரும்பவில்லை. நான் ராஜினாமா செய்வதற்கான முடிவை எடுத்துள்ளேன்.

இராணுவ மற்றும் பாதுகாப்புப் படையினர் தங்கள் ஆயுதங்களைப் பயன்படுத்தி அரச குடியிருப்பைப் பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பார்கள். இரத்தம் தவிர்க்க முடியாமல் சிந்தப்படும். ஆத்திரமூட்டல்களுக்கு செல்லக்கூடாது என்று இரு தரப்பினரையும் நான் கேட்டுக்கொள்கிறேன் என கூறினார்.



Next Story