70 ஆண்டுகளில் முதன்முறையாக அமெரிக்காவில் பெண்ணுக்கு மரணதண்டனை... என்ன குற்றம் செய்தார்...?


70 ஆண்டுகளில் முதன்முறையாக அமெரிக்காவில் பெண்ணுக்கு மரணதண்டனை... என்ன குற்றம் செய்தார்...?
x
தினத்தந்தி 17 Oct 2020 11:08 AM GMT (Updated: 17 Oct 2020 11:08 AM GMT)

70 ஆண்டுகளில் முதன்முறையாக அமெரிக்காவில் ஒரு பெண்ணுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது

வாஷிங்டன்

அமெரிக்காவில் 1953ஆம் ஆண்டுக்குப் பிறகு முதன்முறையாக ஒரு பெண்ணுக்கு மரண தண்டனை விதிக்கப்பட உள்ளது.

லிசா மாண்ட்கோமேரி (43) என்ற பெண் தான் கர்ப்பமடையாதததால், கர்ப்பிணியான பாபி ஜோ ஸ்டின்னெட்
(23) என்றகர்ப்பிணிப்பெண்ணை கழுத்தை நெறித்துக் கொலை செய்து அவரது வயிற்றை கிழித்து, அவரது கருவிலிருந்த குழந்தையை திருடிக்கொண்டார்.

திருடிய குழந்தையை தன் வீட்டுக்கு கொண்டு சென்று தன் குழந்தைபோல் காட்டிக்கொண்ட லிசாவை போலீசார் கைது செய்தனர். அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.அவரிடமிருந்த குழந்தை மீட்கப்பட்டு  பாபி ஜோ கணவரிடம் ஒப்படைக்கப்பட்டது. விக்டோரியா ஜோ ஸ்டின்னெட் என்ற அந்த குழந்தைக்கு இப்போது 16 வயதாகிறது.

இந்நிலையில், லிசாவுவுக்கு டிசம்பர் மாதம் 8ஆம் தேதி மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.>விஷ ஊசி போட்டு அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. 1953ஆம் ஆண்டு முதல் அமெரிக்க அரசு பெண்கள் யாருக்கும் மரண தண்டனை விதிக்கவில்லை.

டிரம்ப் ஆட்சிக்கு வந்தததும் 17 ஆண்டுகளாக மரண தண்டனைகள் நிறைவேற்றப்படாமல் இருந்த நிலைமையை முடிவுக்கு கொண்டுவந்தார். ஜூலைக்குப் பின் ஏழு கைதிகளுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், இப்போது, 70 ஆண்டுகளில் முதன்முறையாக அமெரிக்காவில் ஒரு பெண்ணுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது


Next Story