உலக செய்திகள்

அஜர்பைஜான்-ஆர்மேனியா இடையே 2-வது சண்டை நிறுத்தம் + "||" + Temporary Armenia–Azerbaijan ceasefire comes into effect

அஜர்பைஜான்-ஆர்மேனியா இடையே 2-வது சண்டை நிறுத்தம்

அஜர்பைஜான்-ஆர்மேனியா இடையே 2-வது சண்டை நிறுத்தம்
ரஷியாவின் சமாதான முயற்சியின் மூலம் இரு நாடுகளும் சண்டை நிறுத்தத்துக்கு சம்மதம் தெரிவித்து, கடந்த 10-ந் தேதி அங்கு சண்டை நிறுத்தம் அமலுக்கு வந்தது
பாகு, 

சர்ச்சைக்குரிய நாகோர்னோ காராபாக் பிராந்தியம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பாக அஜர்பைஜான் மற்றும் ஆர்மேனியா நாடுகளுக்கு இடையில் கடந்த ஒரு மாதமாக நடந்து வரும் மோதல்களில் நூற்றுக்கணக்கான வீரர்கள் மற்றும் அப்பாவி மக்கள் பலியாகினர். இதையடுத்து ரஷியாவின் சமாதான முயற்சியின் மூலம் இரு நாடுகளும் சண்டை நிறுத்தத்துக்கு சம்மதம் தெரிவித்து, கடந்த 10-ந் தேதி அங்கு சண்டை நிறுத்தம் அமலுக்கு வந்தது. 

ஆனால் இந்த சண்டை நிறுத்தம் அமலுக்கு வந்து ஒரு நாளுக்குள்ளாகவே இரு நாடுகளும் மீண்டும் மோதலில் ஈடுபட்டன. பொதுமக்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவதாக இருநாடுகளும் பரஸ்பரம் குற்றம்சாட்டி வந்தன.

இந்த விவகாரம் தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் இன்று (திங்கட்கிழமை) கூடி விவாதிக்க உள்ளதாக தகவல் வெளியான நிலையில், மனிதாபிமான அடிப்படையில் சண்டை நிறுத்தத்துக்கு ஒப்புக்கொள்வதாக இரு நாடுகளும் நேற்று முன்தினம் அறிவித்தன. அதன்படி நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் இந்த 2-வது சண்டை நிறுத்தம் அமலுக்கு வந்ததாக இரு நாடுகள் தரப்பிலும் அறிவிக்கப்பட்டது.


தொடர்புடைய செய்திகள்

1. ரஷ்யாவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: ஒரே நாளில் மேலும் 459 பேர் உயிரிழப்பு
ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 22.6 லட்சத்தைக் கடந்துள்ளது.
2. ரஷ்யாவின் ‘ஸ்பூட்னிக்’ தடுப்பூசியின் உற்பத்தி மற்றும் மருத்துவ தரவுகளை சமர்பிக்க உலக சுகாதார மையம் அறிவுறுத்தல்
ரஷ்யாவின் ‘ஸ்பூட்னிக்’ தடுப்பூசியின் உற்பத்தி மற்றும் மருத்துவ தரவுகள் குறித்து தெரிவிக்குமாறு மருந்து தயாரிப்பு நிறுவனத்திற்கு உலக சுகாதார மையம் அறிவுறுத்தியுள்ளது.
3. ரஷ்யாவில் கொரோனா தொற்றுக்கு மேலும் 491 பேர் பலி: புதிதாக 24,326 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
ரஷ்யாவில் கொரோனா தொற்றுக்கு மேலும் 491 பேர் பலியாகினர். புதிதாக 24,326 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. ரஷ்யாவில் ஒரே நாளில் 23,610 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
ரஷ்யாவில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக ஒரே நாளில் 23,610 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. ரஷ்யாவில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: இன்று மேலும் 20,985 பேருக்கு தொற்று உறுதி
ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 19.91 லட்சத்தைக் கடந்துள்ளது.