சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் மீது ஜமால் கசோகியின் காதலி வழக்கு


சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் மீது ஜமால் கசோகியின் காதலி வழக்கு
x
தினத்தந்தி 21 Oct 2020 5:55 AM GMT (Updated: 21 Oct 2020 7:02 AM GMT)

சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் மீது அமெரிக்காவில் ஜமால் கசோகியின் காதலி வழக்கு தொடர்ந்து உள்ளார்.

வாஷிங்டன்

59 வயதான சவுதி அரேபியாவின்  ஜமால் கசோகி அரச குடும்பத்தின் தீவிர விமர்சகராக இருந்தார்.  2017ஆம் ஆண்டில் சவிதி அரேபியாவில் இருந்து வெளியேறி அமெரிக்காவில் தஞ்சம் அடைந்தார். 

துருக்கி பெண்ணான ஹதீஜா  ஜென்கிஸை காதலித்தார். அவரி திருமணம் செய்ய முடிவு செய்த அவர், முதல் திருமணத்தின் மணமுறிவுஆவணங்களைப் பெற 2018ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி இஸ்தான்புல்லில் உள்ள செளதி துணைத் தூதரகத்துக்கு சென்றார்.

ஆனால் திரும்பி வரவில்லை. இதைத்தொடர்ந்து துருக்கி அதிகாரிகள் நடத்திய விசாரணையில், தூதரகத்துக்கு உள்ளே பதிவான ரகசிய உரையாடல்களை வைத்து கசோகி மிகவும் கொடூரமான முறையில் கொல்லப்பட்டிருப்பது தெரிய வந்தது.

துருக்கியில் உள்ள சவுதி அரேபியா துணைத் தூதரகத்தில் கொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர் ஜமால் கசோகியை கொலை செய்ய உத்தரவிட்டதாக, சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் மீது அமெரிக்காவில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கசோகி கொல்லப்படும் முன்பு அவர் திருமணம் செய்து கொள்ளவிருந்த அவரது காதலி ஹதீஜா ஜெங்கிஸ் மற்றும் கசோகி நிறுவிய 'டெமோக்ரசி பார் த அரப் வோர்ல்டு நவ்' எனும் அமைப்பு சார்பில் வாஷிங்டனில் உள்ள நீதிமன்றம் ஒன்றில் நேற்று வழக்கு தொடரப்பட்டது.

துருக்கி நாட்டை சேர்ந்த ஹதீஜா தமக்கு தனிப்பட்ட வாழ்க்கையிலும், பொருளாதார ரீதியாகவும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தனது மனுவில் கூறியுள்ளார்.


Next Story