முகக்கவசம் அணிந்தபடி வாக்கிங் சென்ற நாய்! வைரலாகும் வீடியோ: மாஸ்க் அணிய மறுக்கும் அறிவற்றவர்களுக்கு இந்த நாய் ஒரு எடுத்துக்காட்டு என சமூகதளவாசிகள் புகழாரம்


முகக்கவசம் அணிந்தபடி வாக்கிங் சென்ற நாய்! வைரலாகும் வீடியோ: மாஸ்க் அணிய மறுக்கும் அறிவற்றவர்களுக்கு இந்த நாய் ஒரு எடுத்துக்காட்டு என சமூகதளவாசிகள் புகழாரம்
x
தினத்தந்தி 23 Oct 2020 4:21 PM GMT (Updated: 23 Oct 2020 4:21 PM GMT)

அயர்லாந்து நாட்டில் முகக்கவசம் அணிந்தபடி வாக்கிங் சென்ற நாயின் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


அயர்லாந்து நாட்டில் ஒரு நாய் முகக்கவசம் அணிந்தபடி வாக்கிங் சென்ற வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. இந்த வீடியோ அயர்லாந்தின் டப்ளின் நகரில் படமாக்கப்பட்டுள்ளது.

ட்விட்டர் பயனர் டாராக் வார்ட் காரில் செல்லும்போது டப்ளின் சாலையில், ஒரு பெண் தனது நாயை நடைப்பயிற்சிக்கு அழைத்துச் செல்வதைக் கண்டார். அப்போது அந்த நாய் முகக்கவசம் அணிந்திருந்ததை பார்த்து ஆச்சர்யமடைந்து அந்த வீடியோ காட்சியை டுவிட்டரில் பகிர்ந்தார். இந்த வீடியோகாட்சிகள் தற்போது மிகவும் வைரலாகி வருகிறது.

நாயை வாக்கிங் கூட்டிப்போவது ஒரு பொதுவான விஷயம்தான், ஆனால், இந்த நாயிடம் ஒரு வித்தியாசம் இருந்தது. இந்த நாய் ஒரு முகக்கவசம் (Facemask) அணிந்திருந்தது.

இதை இதுவரை 90,000 க்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். 5,000 லைக்குகளையும் இந்த வீடியோ பெற்றுள்ளது.

வீடியோவைப் பார்த்தபின் பெரும்பாலான நெட்டிசன்கள் ஆச்சரியப்பட்டார்கள், சிரித்தார்கள். சிலருக்கு, இந்த நாய் சேனிடைசும் செய்துகொள்ளுமோ என்ற சந்தேகமும் வந்தது.

ஒரு சமூகதளவாசி, “மாஸ்க் அணிய மறுக்கும் அறிவற்றவர்களுக்கு இந்த நாய் ஒர் எடுத்துக்காட்டு.  இது அவர்களை விட அதிபுத்திசாலி” என எழுதியுள்ளார்.

Next Story