நல்லுறவு ஒப்பந்தங்களை தொடர்ந்து மத்திய கிழக்கின் வரைபடத்தையே மாற்றுகிறோம் - இஸ்ரேல் பிரதமர்


நல்லுறவு ஒப்பந்தங்களை தொடர்ந்து மத்திய கிழக்கின் வரைபடத்தையே மாற்றுகிறோம் - இஸ்ரேல் பிரதமர்
x
தினத்தந்தி 25 Oct 2020 12:42 PM GMT (Updated: 25 Oct 2020 12:42 PM GMT)

நல்லுறவு ஒப்பந்தங்களை தொடர்ந்து நாம் மத்திய கிழக்கின் வரைபடத்தையே மாற்றுகிறோம் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார்.

ஜெருசலம்,

1948-ம் ஆண்டு இஸ்ரேல் தனி நாடாக அறிவிக்கப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த வளைகுடா நாடுகள் இஸ்ரேலுக்கு எதிராக போரில் ஈடுபட்டன. இந்த போரில் இஸ்ரேல் வெற்றி பெற்றது. எனினும் இஸ்ரேலை ஒரு தனி நாடாக அரபு நாடுகள் ஏற்றுக்கொள்ளவில்லை.

இதனால் அந்த நாட்டுடன் தூதரகம், வர்த்தகம் என எந்த விதமான உறவுகளையும் அரபு நாடுகள் ஏற்படுத்திக் கொள்ளவில்லை. அதுமட்டுமின்றி அரபு நாடுகள் இஸ்ரேலுடன் தொடர்ந்து மோதல் போக்கை கையாண்டு வருகின்றன.

எனினும் 1979-ம் ஆண்டு எகிப்தும், 1994-ம் ஆண்டு ஜோர்டானும் இஸ்ரேலுடன் அமைதி ஒப்பந்தம் செய்து கொண்டன.

அதன் மூலம் அந்த 2 நாடுகளும் இஸ்ரேலுடன் தூதரகம் உள்ளிட்ட உறவுகளை ஏற்படுத்திக்கொண்டன. இஸ்ரேலை கடுமையாக எதிர்த்து வந்த ஒரு அரபு நாடு ஐக்கிய அரபு அமீரகம். 1971-ம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தின் முதல் அதிபரான ஷேக் சையத் பின் சுல்தான் அல் நஹ்யான் இஸ்ரேலை ‘எதிரி’ என்று குறிப்பிட்டிருந்தார்.

குறிப்பாக பாலஸ்தீனம் மீதான ஆக்கிரமிப்பு விவகாரத்தில் இஸ்ரேலை ஐக்கிய அரபு அமீரகம் கடுமையாக விமர்சனம் செய்து வந்தது.

இது ஒருபுறம் இருந்தாலும் இஸ்ரேலுடன் நெருங்கிய நட்புறவை கடைபிடித்து வரும் அமெரிக்கா இஸ்ரேலுக்கும், ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் இடையில் சமாதானத்தை ஏற்படுத்த முயற்சிகளை மேற்கொண்டு வந்தது.

இந்த நிலையில் வெள்ளிக்கிழமை அமெரிக்காவின் முயற்சியின் மூலம் சூடானுடன் அமைதி ஒப்பந்தத்தை இஸ்ரேல் நிறைவேற்றியுள்ளது.

இது குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியதாவது: 

முன்னர் இஸ்ரேல் முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்டது. இப்போது முழு உலகத்துடனும் இணைகிறது. இன்னும் பல நாடுகளுடன் நல்லுறவு ஒப்பந்தம் தொடரும். சவூதி அரேபியா, பக்ரைன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வழியாக விமானப் பயணம் நிறைய பணத்தையும், நேரத்தையும் மிச்சமாக்கும். சூடானுடனான ஒப்பந்தம் இஸ்ரேலியர்கள் அட்லாண்டிக்கை கடக்க உதவும். நாம் மத்திய கிழக்கின் வரைபடத்தை மாற்றிக் கொண்டிருக்கிறோம் என கூறியுள்ளார்.

Next Story