மெக்கா நகரின் பெரிய மசூதிக்குள் கார் ஒன்று அதிகவேகமாக பாய்ந்து விபத்து


மெக்கா நகரின் பெரிய மசூதிக்குள் கார் ஒன்று அதிகவேகமாக பாய்ந்து விபத்து
x
தினத்தந்தி 31 Oct 2020 11:18 AM GMT (Updated: 31 Oct 2020 11:18 AM GMT)

சவுதி அரேபியாவின் மெக்கா நகரில் உள்ள பிரபல மசூதிக்குள் கார் ஒன்று அதிகவேகமாக பாய்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மெக்கா

சவுதி அரேபியாவின் மெக்கா நகரில் பெரிய மசூதியின் தெற்கு முற்றத்தை சுற்றியுள்ள சாலையில் அதிவேகமாக வந்த கார் ஒன்று திடீரென மசூதிக்குள் பாய்ந்து நுழைவு வாயிலில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாரும் காயமடையவில்லை.

சம்பவம் குறித்து தகவறிந்த பாதுகாப்பு அதிகாரிகள் இரவு 10:30 மணிக்கு மசூதிக்கு விரைந்ததாக மெக்கா பிராந்திய ஆளுநரின் செய்தித் தொடர்பாளர் சுல்தான் அல்-தோசாரி கூறினார்.காரை மோதிய நபரை சவுதி அரேபியாவின் போலீஸ் அதிகாரிகள் கைது செய்ததாக உள்ளூர் ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

கைது செய்யப்பட்ட ஓட்டுநர் சவுதி நாட்டவர் என்றும் அவர் அசாதாரண நிலையில் இருந்ததாக அதிகாரிகள் கூறினார், மேலும் ஓட்டுநர் பொது வழக்கு விசாரணைக்கு அனுப்பப்பட்டார் என தெரிவித்தனர்.




Next Story