ஹோண்டுராசை தாக்கிய புயல்; நிலச்சரிவில் சிக்கி 26 பேர் பலி


ஹோண்டுராசை தாக்கிய புயல்; நிலச்சரிவில் சிக்கி 26 பேர் பலி
x
தினத்தந்தி 9 Nov 2020 10:51 PM GMT (Updated: 9 Nov 2020 10:51 PM GMT)

ஹோண்டுராசின் வடக்கு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 6 பேர் மாயமாகியுள்ளனர்.

டெகுசில்பா, 

மத்திய அமெரிக்க நாடுகளை ஈட்டா என்கிற சக்தி வாய்ந்த புயல் நிலைகுலைய செய்துள்ளது. ஹோண்டுராஸ், எல் சல்வடோர், கவுதமாலா ஆகிய நாடுகளில் இந்த புயல் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் ஹோண்டுராசில் ஈட்டா புயல் தாக்கியதை தொடர்ந்து பேய் மழை கொட்டி தீர்த்தது. இதனால் அங்குள்ள பல்வேறு நகரங்களில் உள்ள முக்கிய நீர்நிலைகள் நிரம்பி வழிகிறது. ஊர்களுக்குள் வெள்ளம் புகுந்து கரைபுரண்டு ஓடுகிறது. நூற்றுக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் சுமார் 70 ஆயிரம் மக்கள் தங்கள் வீடுகளை இழந்து பாதுகாப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் ஹோண்டுராசின் வடக்கு பகுதியில் உள்ள பல நகரங்களில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 49 வீடுகள் உள்பட 140-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் மண்ணோடு மண்ணாக புதைந்தன. 20-க்கும் மேற்பட்ட மேம்பாலங்கள் இடிந்து விழுந்தன.

இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 6 பேர் மாயமாகியுள்ளனர். அவர்களின் கதி என்ன என்பது தெரியவில்லை.

Next Story