செல்ல பிராணியுடன் விளையாடிய போது விபரீதம்: அதிபராக பதவி ஏற்க உள்ள ஜோ பைடனுக்கு காலில் காயம்


செல்ல பிராணியுடன் விளையாடிய போது விபரீதம்: அதிபராக பதவி ஏற்க உள்ள ஜோ பைடனுக்கு காலில் காயம்
x
தினத்தந்தி 30 Nov 2020 8:57 AM GMT (Updated: 30 Nov 2020 10:36 AM GMT)

அமெரிக்க அதிபராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன் தனது செல்ல நாயுடன் விளையாடிய போது வலது காலில் லேசான காயம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

வாஷிங்டன்,

அமெரிக்க அதிபராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன் நேற்று முன் தினம் இரவு தன் இரு நாய்களில் ஒன்றான மேஜருடன் விளையாடும்போது அவருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் டெலாவேரின் நெவார்க்கிலுள்ள எலும்பியல் நிபுணரைச் சந்தித்ததாக அவரது அலுவலகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஜோ பைடனுக்கு சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பரிசோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

அவரது வலது காலின் கணுக்கால் பகுதியில் லேசான காயம் ஏற்பட்டுள்ளதால் சில வாரங்களுக்கு அவருக்கு நடைப்பயிற்சி தேவைப்படும் என்றும் சிறப்புக் காலணி ஒன்றை அணிய வேண்டுமெனவும் டாக்டர் ஓ கானர் தெரிவித்தார்.

ஜோ பைடனின் தனிப்பட்ட  டாக்டர் கூற்றுப்படி, எக்ஸ்ரேவில் வெளிப்படையாக எலும்பு முறிவைக் காட்டவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு 'மேஜர்' என்ற இந்த நாயை பைடன் தத்தெடுத்தது குறிப்பிடத்தக்கது.

Next Story