அமெரிக்காவில் பாலைவனத்தின் நடுவே மர்மமான முறையில் நிறுவப்பட்ட உலோக தூண் திடீர் மாயம்


அமெரிக்காவில் பாலைவனத்தின் நடுவே மர்மமான முறையில் நிறுவப்பட்ட உலோக தூண் திடீர் மாயம்
x
தினத்தந்தி 30 Nov 2020 3:36 PM GMT (Updated: 30 Nov 2020 3:36 PM GMT)

அமெரிக்காவில் பாலைவனத்தின் நடுவே மர்மமான முறையில் நிலைநிறுத்தப்பட்டிருந்த உலோக தூண் திடீர் மாயமாகி உள்ளது.

வாஷிங்டன்

அமெரிக்காவின் தெற்கு உட்டாவில்  உள்ள பாலைவனத்தில் 12 அடி உயர மர்ம உலோகப் பொருள் கண்டறியப்பட்டது. ஒரு சில இது கலைப்பொருள் என்றும் , ஒரு சிலர் இது வேற்றுகிரகவாசிகளின் பொருள் என்றும் கூறி வந்தனர். ரெட் ராக் பாலைவனத்தில் ஆடுகள் கணக்கெடுப்புப் பணியின்போது, ஒரு பள்ளத்தாக்கின் அருகே தரையில் செங்குத்தாக பொருத்தப்பட்டிருந்த மர்ம உலோகப்பொருளை அதிகாரிகள் கண்டறிந்தனர்.

இந்த கட்டமைப்பை முதன்முதலில் ஒரு ஹெலிகாப்டர் பைலட் மற்றும் வனவிலங்கு அதிகாரிகள்  குழு கண்டு பிடித்தது பிக்ஹார்ன் ஆடுகளின் வருடாந்திர எண்ணிக்கைக்காக அந்த பகுதிக்கு மேலே ஹெலிகாப்டரில் அவர்கள் பறந்து கொண்டிருந்தனர். ஒற்றைப்பாதையை உன்னிப்பாக ஆராய்ந்த பைலட் பிரட் ஹட்ச்சிங்ஸ், இது ஒரு கலைஞரின் படைப்பாக இருக்கலாம் என்று எண்ணி உள்ளார்.

அதன் தோற்றம் குறித்த தெளிவான விவரங்கள் எதுவும் இல்லாத நிலையில், சமூக ஊடகங்களில் ஊகங்கள் தொடர்ந்து கொட்டப்பட்டு வருகின்றன.

இந்த நிலத்தை சொந்தமாக வைத்திருக்கும் அமெரிக்க நில மேலாண்மை பணியகம், இந்த விவகாரம் குறித்து  கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டதாக செய்தி நிறுவனம் ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

உலோக தூண் யாரால் நிறுவப்பட்டிருக்கும் என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்த திட்டமிட்டிருந்தனர்.இந்நிலையில் அந்த உலோக தூண் நேற்று இரவு மாயமாகியுள்ளது. இது குறித்து விசாரணை நடத்த ஊள்ளூர் போலீசார் முடிவு செய்துள்ளதாக யூடா நில மேலாண்மை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story