ஜப்பானில் மாறுபட்ட கொரோனா கண்டுபிடிப்பு; இங்கிலாந்து ரகத்தை சேர்ந்தது அல்ல ! + "||" + Japan finds new Covid variant different from the Britain and South African strain
ஜப்பானில் மாறுபட்ட கொரோனா கண்டுபிடிப்பு; இங்கிலாந்து ரகத்தை சேர்ந்தது அல்ல !
இங்கிலாந்தில் உருவான உருமாறிய கொரோனாவில் இருந்து மாறுபட்ட புதிய வகை உருமாறிய கொரோனா, ஜப்பானில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
டோக்கியோ,
இங்கிலாந்தில் உருவான உருமாறிய கொரோனாவில் இருந்து மாறுபட்ட புதிய வகை உருமாறிய கொரோனா, ஜப்பானில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிரேசில் நாட்டில் இருந்து விமானத்தில் டோக்கியோ விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்த 4 பேரிடம் இந்த புதிய கொரோனா உறுதி செய்யப்பட்டது. 45 வயதான ஆண், 35 வயதான பெண், 19 வயதுக்குட்பட்ட ஒரு ஆண், பெண் ஆகியோருக்கு இந்த கொரோனா கண்டுபிடிக்கப்பட்டது.
இவர்களில் 2 பேருக்கு எந்த அறிகுறியும் இல்லை. இருப்பினும், 4 பேரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த மாறுபட்ட கொரோனா குறித்து உலக சுகாதார நிறுவனத்துடனும், பிற நாடுகளுடனும் ஜப்பான் ஆலோசனை நடத்தி வருகிறது. தற்போதைய தடுப்பூசிகள், இந்த கொரோனாவுக்கு எதிராக செயல்படுமா என்பது இன்னும் தெளிவுபடுத்தப்படவில்லை.
இங்கிலாந்தில் ஜூன் 21 அன்று அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளும் நீக்கப்படும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்று பிரதமர் போரிஸ் ஜான்சன் எச்சரித்துள்ளார்.