உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9.19 கோடியாக உயர்வு


உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9.19 கோடியாக உயர்வு
x
தினத்தந்தி 13 Jan 2021 1:23 AM GMT (Updated: 13 Jan 2021 1:23 AM GMT)

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9.19 கோடியாக உயர்ந்துள்ளது.

ஜெனீவா,

உலகம் முழுவதும் தற்போது 2-வது கட்ட கொரோனா அலை அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் தனது கோர முகத்தை காட்டி வருகிறது. இதனிடையே இங்கிலாந்தில் ஏற்பட்டுள்ள புதிய வகை கொரோனா வைரஸ் பரவல் ஒட்டுமொத்த உலகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. 

இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 9,19,87,337 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 6,58,06,194 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 19 லட்சத்து 68 ஆயிரத்து 598 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா தொற்றுக்கு தற்போது 24,102,453 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1,10,092 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா  -  பாதிப்பு- 2,33,68,096, உயிரிழப்பு -  3,89,597, குணமடைந்தோர் -1,38,16,011
இந்தியா   -    பாதிப்பு- 10,494,811, உயிரிழப்பு -  151,542, குணமடைந்தோர் -10,126,913
பிரேசில்   -    பாதிப்பு - 8,195,637, உயிரிழப்பு -  204,726, குணமடைந்தோர் - 7,273,707
ரஷ்யா    -    பாதிப்பு - 3,448,203, உயிரிழப்பு -    62,804, குணமடைந்தோர் - 2,825,430
இங்கிலாந்து -  பாதிப்பு - 3,164,051, உயிரிழப்பு -    83,203, குணமடைந்தோர் - 1,406,967

Next Story