பிற நாடுகளின் வான் பகுதியில் உளவு விமானங்களை அனுமதிக்கும் ஒப்பந்தத்தில் இருந்து ரஷியா விலகல் + "||" + Russia's withdrawal from the agreement to allow spy planes in the airspace of other countries
பிற நாடுகளின் வான் பகுதியில் உளவு விமானங்களை அனுமதிக்கும் ஒப்பந்தத்தில் இருந்து ரஷியா விலகல்
பிற நாடுகளின் வான் பகுதியில் உளவு விமானங்களை அனுமதிக்கும் ஒப்பந்தத்தில் இருந்து ரஷியா விலகியுள்ளது.
மாஸ்கோ,
ரஷியாவுக்கும், மேலை நாடுகளுக்கும் இடையே நம்பிக்கையை உருவாக்கும் வகையில், கடந்த 2002-ம் ஆண்டு ‘திறந்த வான்வெளி ஒப்பந்தம்’ கையெழுத்திடப்பட்டது. இது, ஒரு நாடு, மற்ற நாட்டின் வான் பகுதியில் உளவு விமானங்களை இயக்கி, ராணுவ படைகள் பற்றிய தகவல்களை சேகரிக்க வகை செய்கிறது. இதில், 30-க்கு மேற்பட்ட நாடுகள் கையெழுத்திட்டுள்ளன.
இந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக அமெரிக்கா கடந்த ஆண்டு மே மாதம் அறிவித்தது. ஒப்பந்தத்தை ரஷியா மீறுவதாக குற்றம்சாட்டி, இந்த நடவடிக்கையை எடுத்தது.
இந்தநிலையில், ஒப்பந்தத்தில் இருந்து தானும் விலகுவதாக ரஷியா நேற்று அறிவித்தது. ஒப்பந்தம் செயல்படுவதற்கான முட்டுக்கட்டைகளை அகற்ற முடியாததால் விலகிக்கொள்வதாக ரஷிய வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.