உலக செய்திகள்

இங்கிலாந்தில் புதிய உச்சம் தொட்ட கொரோனா பாதிப்பு மரணம்; 24 மணி நேரத்தில் 1,610 பேர் மரணம் + "||" + Britain reports record 1,610 daily coronavirus deaths

இங்கிலாந்தில் புதிய உச்சம் தொட்ட கொரோனா பாதிப்பு மரணம்; 24 மணி நேரத்தில் 1,610 பேர் மரணம்

இங்கிலாந்தில் புதிய உச்சம் தொட்ட கொரோனா பாதிப்பு மரணம்; 24 மணி நேரத்தில் 1,610 பேர் மரணம்
இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா மரண எண்ணிக்கையானது எப்போதும் இல்லாத புதிய உச்சத்தை தொட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
லண்டன் 

இங்கிலாந்தில் தேசிய ஊரடங்கு நீடிக்கும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,610 பேர்கள் கொரோனாவால் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளனர். நாட்டில் கொரோனா பரவல் தொடங்கிய நாள் முதல், இது எப்போதும் இல்லாத புதிய உச்சம் இது என கூறப்படுகிறது.  6 நாட்களுக்கு முன்னர் 1,564 பேர்கள் கொரோனாவுக்கு பலியான நிலையில், அதுவே அதுவரையான புதிய உச்சம் என தெரிவிக்கப்பட்டது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 33,355 என தெரிய வந்துள்ளது.இதனால் இங்கிலாந்தில்  கொரோனா பாதிப்பு உறுதி செய்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 3,466,849 என உத்தியோகப்பூர்வ தகவல் தெரிவிக்கின்றன.

மேலும், கொரோனாவால் மொத்த மரண எண்ணிக்கை மட்டும் 91,470 என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் நம்பிக்கை அளிக்கும் வகையில், இரண்டு வாரத்திற்கு முன்னர், ஜனவரி 5 அன்று பதிவான கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை விட, தற்போது சரிவடைந்து வருவதாக கூறப்படுகிறது.

இங்கிலாந்தில்  ஜனவரி 5 அன்று 60,919 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இருப்பினும் ஒரே நாளில் அதிக மரண எண்ணிக்கை பதிவு செய்யப்படுவது, இதுவே முதல் முறை எனவும்,1,564 இறப்புகளை பதிவு செய்த ஜனவரி 13 ம் தேதி இரண்டாவது மிக மோசமான நாள் எனவும் அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.

அதுமட்டுமின்றி, டிசம்பர் 8 முதல் ஜனவரி 18 வரையான காலகட்டத்தில் இங்கிலாந்தில்  மொத்தம் 4,266,577 பேர்களுக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் அளிக்கப்பட்ட பின்னர் வெளியாகும் பாதிப்பு மற்றும் இறப்பு என்ணிக்கை இதுவாகும்.

இதனிடையே, வேல்ஸ் பகுதியில் புதிதாக 1106 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனால் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 182,599 என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 8 பேர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ள நிலையில், மொத்த மரண எண்ணிக்கை 4,302 என அறிவிக்கப்பட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. 3-வது டெஸ்ட் கிரிக்கெட்: முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 99/3
இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 112 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
2. 3-வது டெஸ்ட்: இந்தியா அபார பந்து வீச்சு: 112- ரன்களில் சுருண்டது இங்கிலாந்து
இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 112-ரன்களில் ஆல் அவுட் ஆனது.
3. இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட்: இங்கிலாந்து அணி தடுமாற்றம்
இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி தடுமாறி வருகிறது.
4. இங்கிலாந்தில் ஜூன் 21 அன்று அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளும் நீக்கப்படும் என்பதற்கு உத்தரவாதமும் இல்லை பிரதமர் போரிஸ் ஜான்சன்
இங்கிலாந்தில் ஜூன் 21 அன்று அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளும் நீக்கப்படும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்று பிரதமர் போரிஸ் ஜான்சன் எச்சரித்துள்ளார்.
5. தன்னுடன் சண்டையிட்ட ஆண் ஒருவரின் நாக்கை முத்தம் கொடுப்பது போல் கடித்து துப்பிய இளம்பெண்
தன்னுடன் சண்டையிட்ட ஆண் ஒருவரின் நாக்கை முத்தம் கொடுப்பது போல் கடித்து துப்பிய இளம்பெண் ஒருவர் வழக்கை எதிர்கொண்டு வருகிறார்.