தடுப்பூசி நிறுவன தீ விபத்தில் 5 பேர் பலி; ஐ.நா. பொதுச்செயலாளர் வேதனை


தடுப்பூசி நிறுவன தீ விபத்தில் 5 பேர் பலி; ஐ.நா. பொதுச்செயலாளர் வேதனை
x
தினத்தந்தி 22 Jan 2021 10:09 PM GMT (Updated: 22 Jan 2021 10:21 PM GMT)

இந்தியாவில் கொரோனாவுக்கு எதிரான கோவிஷீல்டு தடுப்பூசியை தயாரித்து வழங்குகிற, புனேயில் உள்ள இந்திய சீரம் நிறுவனத்தில் நேற்று முன்தினம் பயங்கரதீ விபத்து ஏற்பட்டது.

நியூயார்க், 

இந்தியாவில் கொரோனாவுக்கு எதிரான கோவிஷீல்டு தடுப்பூசியை தயாரித்து வழங்குகிற, புனேயில் உள்ள இந்திய சீரம் நிறுவனத்தில் நேற்று முன்தினம் பயங்கரதீ விபத்து ஏற்பட்டது. இதில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அதே நேரத்தில் கோவிஷீல்டு தடுப்பூசி உற்பத்தி பாதிக்காது என அந்த நிறுவனத்தின் தலைமைசெயல் அதிகாரி ஆதர் பூனவாலா தெரிவித்தார்.

இந்த தீ விபத்து குறித்து மராட்டிய மாநில அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், “இதையொட்டி ஐ.நா. சபை பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் கருத்து எதுவும் தெரிவித்தாரா?” என்று அவரது செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் துஜாரிக்கிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர் பதில் அளிக்கையில், “சீரம் நிறுவனத்தில் நேரிட்ட தீ விபத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்டதற்கு நாங்கள் வேதனை அடைந்துள்ளோம். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எங்களது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்” என்று குறிப்பிட்டார்.

Next Story