உலக செய்திகள்

முக கவசம் அணியாமல் பொதுவெளியில் தோன்றிய ஜோ பைடன் + "||" + Truth behind picture of Biden without mask just hours after he made it mandatory

முக கவசம் அணியாமல் பொதுவெளியில் தோன்றிய ஜோ பைடன்

முக கவசம் அணியாமல் பொதுவெளியில் தோன்றிய ஜோ பைடன்
முககவசம் அணிவதை கட்டாயமாக்கி உத்தரவு பிறப்பித்த சில மணி நேரத்தில் ஜனாதிபதி ஜோ பைடன் பொதுவெளியில் முகக் கவசம் அணியாமல் தோன்றி சர்ச்சையில் சிக்கினார்.
வாஷிங்டன், 

அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக 78 வயதான ஜோ பைடன் கடந்த புதன்கிழமை பதவியேற்றார். அதன் பின்னர் அவர் அடுத்த 100 நாட்களுக்கு அமெரிக்கர்கள் அனைவரும் கட்டாயமாக முக கவசம் அணிய வேண்டும் என ஜனாதிபதியாக தனது முதல் உத்தரவை பிறப்பித்தார்.

இந்தநிலையில் முககவசம் அணிவதை கட்டாயமாக்கி உத்தரவு பிறப்பித்த சில மணி நேரத்தில் ஜனாதிபதி ஜோ பைடன் பொதுவெளியில் முகக் கவசம் அணியாமல் தோன்றி சர்ச்சையில் சிக்கினார்.

புதன்கிழமை மாலை வாஷிங்டனில் உள்ள முன்னாள் ஜனாதிபதி ஆப்ரஹாம் லிங்கனின் நினைவிடத்துக்கு சென்ற ஜோ பைடன் முக கவசம் அணியாமல் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்ததாக கூறப்படுகிறது. இது சர்ச்சையை கிளப்பியுள்ளது.‌  எனினும் உடனடியாக ஜோ பைடன் மாஸ்க் அணிந்துவிட்டது  குறிப்பிடத்தக்கது.

முன்னதாக முக கவசம் அணிவது பற்றி ஜனாதிபதி ஜோ பைடன் டுவிட்டரில் ‘‘முக கவசங்கள் அணிவது ஒரு பாகுபாடான பிரச்சினை அல்ல. ‌இது எண்ணற்ற உயிர்களை காப்பாற்ற கூடிய ஒரு தேசபக்தி செயல். எனவே தான் முக கவசம் அணிவதை கட்டாயமாக்கி உத்தரவு பிறப்பித்தேன்’’ என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


தொடர்புடைய செய்திகள்

1. ஜோ பைடனின் பட்ஜெட் வேட்பாளரான நீரா தாண்டன் நியமனத்திற்கு மேலும் 2 எம்.பிக்கள் எதிர்ப்பு
ஜோ பைடனின் பட்ஜெட் வேட்பாளரான நீரா தாண்டன் நியமனத்திற்கு மேலும் 2 எம்.பிக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
2. ஜோ பைடனின் பட்ஜெட் வேட்பாளரான நீரா தாண்டன் நியமனத்தில் சிக்கல்
ஜோ பைடனின் பட்ஜெட் வேட்பாளரான நீரா தாண்டன் நியமனத்தில் சிக்கல் எழுந்துள்ளது.
3. அமெரிக்காவின் டெக்சாசில் வாட்டி வதைக்கும் கடும் குளிர்; பேரிடர் மாகாணமாக அறிவிப்பு
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் வரலாறு காணாத கடும் குளிர் வாட்டி வருகிறது.
4. வங்காளதேசத்தில் அமெரிக்க எழுத்தாளர் கொலை வழக்கில் 5 பேருக்கு மரண தண்டனை
வங்காள தேசத்தில் பிறந்து அமெரிக்காவில் வசித்து வந்தவர் பிரபல வலைத்தள எழுத்தாளர் அவிஜித் ராய். மெக்கானிக் என்ஜினீயரான இவர் பயங்கரவாதத்துக்கு எதிராக சமூக வலைத்தளத்தில் பல கட்டுரைகளை எழுதிவந்தார்.
5. மியான்மரில் அரசியல் தலைவர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்: அமெரிக்க அதிபர் ஜோ பைடன்
மியான்மரில் கடந்த 1 ஆம் தேதி ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இதையடுத்து, ஆங் சான் சூகி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.