உலக அளவில் 10 கோடியை நெருங்கும் கொரோனா பாதிப்பு


உலக அளவில் 10 கோடியை நெருங்கும் கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 24 Jan 2021 6:01 PM GMT (Updated: 24 Jan 2021 6:01 PM GMT)

உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 10 கோடியை நெருங்கியுள்ளது.

ஜெனீவா,

உலகம் முழுவதும்  கொரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 10 கோடியை நெருங்கியுள்ளது. கொரோனா பாதிப்பு பற்றிய விவரங்களை வெளியிட்டு வரும் வோல்டோ மீட்டர்ஸ் இணையதள புள்ளி விவரங்களின் படி கூறப்பட்டு இருப்பதாவது: 

சா்வதேச அளவில் நேற்று ( சனிக்கிழமை)  மட்டும் 5,75,521 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இன்று ( ஞாயிற்றுக்கிழமை) மாலை வரை மேலும் 1.2 லட்சம் பேருக்கு அந்த நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்துடன், சா்வதேச கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 99.5 கோடியைத் தாண்டியுள்ளது என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா  பாதிப்பில் அமெரிக்கா தொடா்ந்து முதலிடத்தில் உள்ளது. அந்த நாட்டில் மட்டும் 25.59 கோடிக்கு மேலானவா்களுக்கு தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்கா, இந்தியாவுக்கு அடுத்தபடியாக பிரேஸிலில் அதிகம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அந்த நாட்டில் இதுவரை 8.81 கோடி பேர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

Next Story